Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
52 ஆண்டுகளுக்குப் பிறகு., வரலாறு படைத்த இந்திய அணி!

Aug 28, 2026 - 04:39 PM

52 ஆண்டுகளுக்குப் பிறகு., வரலாறு படைத்த இந்திய அணி!
Mobitel Inner 1278

மகளிர் ஹாக்கி உலகக் கிண்ணத்தொடர், 1974 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 

இதுவரை 15 உலகக் கிண்ணத் தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், 16 ஆவது உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. 

ஆகஸ்ட் 14 ஆம் திகதி தொடங்கிய இந்தத் தொடர், ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தாலும், 5 ஆவது இடத்துக்கான போட்டியில் உலகத் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளும் கடுமையாகப் போராடின. ஆனால், இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடி அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். 

குறிப்பாக, இந்திய அணிக்காக இஷிகா சௌத்ரி (Ishika Chaudhary) ஒரு கோல் அடித்த நிலையில், நவ்நீத் கவுர் (Navneet Kaur) இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையில் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

1974 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கிண்ணத்தில் இந்திய அணி 4 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. அதன்பிறகு, உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடாக தற்போது 5 ஆவது இடம் அமைந்துள்ளது. 

அதாவது, 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை அரங்கில் இந்திய மகளிர் டாப் 5 - இடத்தைப் பிடித்து புதிய சாதனையை பதிவு செய்திருக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278