Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
செப்டம்பர் 6 இல் பிரமாண்டமாக தொடங்கும் Bigg Boss - Season 10!

Aug 27, 2026 - 03:23 PM

செப்டம்பர் 6 இல் பிரமாண்டமாக தொடங்கும் Bigg Boss - Season 10!
Mobitel Inner 1278

தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான 'பிக்பாஸ் தமிழ்' தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. 

இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. 

கடந்த ஒன்பதாவது சீசனில் தனது தனித்துவமான பேச்சாலும், எதார்த்தமான அணுகுமுறையாலும் ரசிகர்களைக் கவர்ந்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இந்த மைல்கல் சீசனையும் தொகுத்து வழங்க மீண்டும் களம் இறங்குகிறார். 

புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என புத்தம் புதிய கலவையோடு இந்த பத்தாவது சீசன் அமையவுள்ளது. 

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. 

வழக்கம் போல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. 

பிக்பாஸ் வீட்டின் உள்ளே நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் பார்வையாளர்கள் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாகக் கண்டுகளிக்கலாம். 

உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு பிக்பாஸ் மேடையை அலங்கரித்த விஜய் சேதுபதி, தனது முதல் சீசனிலேயே (சீசன் 9) போட்டியாளர்களைக் கையாண்ட விதம் மற்றும் வார இறுதி நாட்களில் அவர் காட்டிய 'மக்கள் செல்வன்' பாணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 

தற்போது பிக்பாஸ் தமிழ் தனது 10 ஆவது சீசனை எட்டியுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் வருகை இந்த மைல்கல் சீசனை இன்னும் விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் மாற்றும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278