Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்!

Aug 26, 2026 - 07:45 AM

அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் மலரட்டும்!
Mobitel Inner 1278

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைத்தூதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் எனபாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். 

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. . 

மனிதநேயம், சகோதரத்துவம், நீதி, அன்பு, பொறுமை மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துரைத்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் போதனைகளும் இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான வழிகாட்டியாகும். 

குறிப்பாக, பல்வேறு இனங்களும் மதங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து வாழும் இலங்கை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். 

நபி (ஸல்) அவர்கள் போதித்த மனிதநேயத்தையும், அயலவர் உரிமைகளையும், பிற சமூகங்களின் கண்ணியத்தையும் மதிக்கும் பண்பாட்டையும் நாம் நடைமுறையில் கடைப்பிடிப்பதன் மூலம், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். 

இந்த புனித நாளில், இலங்கையில் வாழும் அனைத்து இன, மத மக்களிடையேயும் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் மேலும் வலுப்பெறவும், எமது தாய்நாட்டில் நிரந்தர அமைதியும் சுபீட்சமும் நிலவவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அனைவருக்கும் இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278