Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
SLT-MOBITEL, ஸ்ரீ தலதா மாளிகையுடன் ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட சிறந்த இணைப்புத் தீர்வுகளை வழங்கும் தனது கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது

Aug 24, 2026 - 01:32 PM

SLT-MOBITEL, ஸ்ரீ தலதா மாளிகையுடன் ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட சிறந்த இணைப்புத் தீர்வுகளை வழங்கும் தனது கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது
Mobitel Inner 1278

இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையுடன் (புத்தரின் புனித தந்ததாது வைக்கப்பட்டுள்ள புனிதத் தலம்) தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக உத்தியோகபூர்வ தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வழங்குநராக இணைந்துள்ளது. இதன் மூலம் நிறுவனம், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கும் இத் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் மிகவும் போற்றப்படும் மத மற்றும் கலாச்சார சின்னங்களில் ஒன்றிற்கு அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் SLT- MOBITEL கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

இத் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, SLT-MOBITEL, தனது மேம்பட்ட fiber வலையமைப்பின் மூலம் இயங்கும் அதிவேக fiber புரோட்பாண்ட் இணைப்பையும், SLT-MOBITEL PEOTV மற்றும் குரல் சேவைகளையும் ஸ்ரீ தலதா மாளிகைக்கு இலவசமாக வழங்கும். இந்த மேம்பட்ட சேவைகள் மாளிகையின் ஊடக மையத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், புனிதமான சமய விழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு தடையின்றி நேரலையில் ஒளிபரப்ப சாத்தியமாக்கின்றது. 

இந்த கூட்டாண்மையின் முக்கிய அம்சமாக, வருடாந்த கண்டி எசல பெரஹெரவின் நேரலை ஒளிபரப்புக்கும் SLT-MOBITEL தொடர்ந்து தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. அதன் வலுவான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை பயன்படுத்தி, நிறுவனம் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் நேரலையில் கண்டு மகிழும் வகையில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாக உலகப் புகழ்பெற்ற இக் கலாச்சார நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை முன்னெடுக்கின்றது. 

நேரடி ஒளிபரப்பிற்கு அப்பால், SLT-MOBITELஇன் தொழில்நுட்ப தீர்வுகள் ஆவணப்படங்கள், புகைப்படங்கள் மற்றும் ஸ்ரீ தலதா மாளிகையின் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க தருணங்களை ஆவணப்படுத்தி, பாதுகாத்து, பரவலாகப் பகிர்வதற்கும் துணைபுரிகிறது. நவீன இணைப்புத் தீர்வுகள் மூலம் SLT-MOBITEL ஆனது எதிர்கால சந்ததியினருக்காக இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதுடன் அதன் போற்றப்படும் மரபுகளுக்கு உலகளாவிய அணுகலை உறுதி செய்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278