Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
செலிங்கோ லைஃப், குடும்ப சவாரி வெற்றியாளர்கள் 1,000 க்கும் மேற்பட்டோருக்கு பேர்ல் பேயில் மகிழ்ச்சி நிறைந்த நாளை வழங்கியது

Jul 17, 2026 - 04:10 PM

செலிங்கோ லைஃப், குடும்ப சவாரி வெற்றியாளர்கள் 1,000 க்கும் மேற்பட்டோருக்கு பேர்ல் பேயில் மகிழ்ச்சி நிறைந்த நாளை வழங்கியது
Mobitel Inner 1278

செலிங்கோ லைஃப், தனது முன்னணி குடும்ப சவாரி மாபெரும் ஊக்குவிப்பு திட்டத்தின் மற்றொரு மறக்கமுடியாத அத்தியாயமாக, இலங்கை முழுவதிலுமிருந்து 1,000-க்கும் மேற்பட்ட காப்புறுதிதாரர்களையும் அவர்களின் அன்புக்குரியவர்களையும் ஒன்றிணைத்து, பேர்ல் பேயில் (Pearl Bay) குடும்ப பாசப்பிணைப்பையும் கொண்டாட்டத்தையும் மையமாகக் கொண்ட உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் இனிய தருணங்கள் நிரம்பிய ஒரு சிறப்பான நாளை ஏற்பாடு செய்தது. 

இந்த பிரத்தியேக நிகழ்வில், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 270 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தோம்பலுடன் பங்கேற்றன. இதன் மூலம், இலங்கையின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான பேர்ல் பே, சிரிப்பு, உறவு, மற்றும் மறக்க முடியாத குடும்ப நினைவுகள் நிறைந்த மகிழ்ச்சி உலகமாக மாற்றப்பட்டது. 

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நுழைவுக் கட்டணம், காலை உணவு மற்றும் மதிய உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய இலவச அனுமதி வழங்கப்பட்டதால், அவர்கள் எந்தக் கவலையும் இன்றி சீரான மற்றும் சுகமான அனுபவத்தைப் பெற்றனர். 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்திலிருந்து பயணித்த காப்புறுதிதாரர்களுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும், ஒவ்வொரு குழுவுடனும் செலிங்கோ லைஃப் பிரதிநிதிகள் இணைந்து பயணித்து, பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்ததுடன், முழுப் பயணத்திலும் தேவையான உதவிகளை வழங்கினர. 

200 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்திலிருந்து வந்த குடும்பங்களுக்காக, செலிங்கோ லைஃப் மேலும் ஒரு படி முன்னேறி, போக்குவரத்து மற்றும் இரவு தங்குமிடச் செலவுகள் முழுமையாக ஏற்கப்பட்ட விசேட அனுசரணைத் தொகுப்பை வழங்கியது. இந்த ஏற்பாடு, அனைவரும் எளிதாக பங்கேற்கும் வகையில், உள்ளடக்கிய மற்றும் சமமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278