Jun 28, 2026 - 12:25 PM
வீரகெட்டியவில் கொலை செய்யப்பட்ட இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர உறுப்பினராக இருந்ததுடன், அவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞரணி ஊடக செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இளைஞர் ஹங்குருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (27) இரவு இடம்பெற்ற மதுபான விருந்தொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, இந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























