Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு

Jun 26, 2026 - 07:03 PM

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு
Mobitel Inner 1278

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, சுமார் 2,980 பேர் காயமடைந்துள்ளதோடு, மேலும் நூற்றுக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. 

முன்னதாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளில் 235 பேர் உயிரிழந்ததாகவும், 4,300 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

வெனிசுலாவில் தங்கியிருந்த மூன்று ஸ்பானிய பிரஜைகள் நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளதை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் 99 பேர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

இது தவிர, 9 போர்த்துக்கேய பிரஜைகள், 2 பிரேசில் பிரஜைகள், 2 சீனப் பிரஜைகள் மற்றும் ஒரு இத்தாலிய பிரஜை உயிரிழந்துள்ளதை அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

எவ்வாறாயினும், வெனிசுலாவிற்கு நிவாரணம் வழங்குவதற்காக பல நாடுகளின் உதவிக்குழுக்கள் தற்போது அந்நாட்டைச் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278