Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி 19 வெற்றியாளர்கள் மறக்கமுடியாத சீனாவிற்கான சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்

Jun 24, 2026 - 05:18 PM

செலிங்கோ லைஃப்பின்  குடும்ப சவாரி 19 வெற்றியாளர்கள் மறக்கமுடியாத சீனாவிற்கான சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்
Mobitel Inner 1278

செலிங்கோ லைஃப்பின் முக்கியமான ஊக்குவிப்பு திட்டமாக திகழும் குடும்ப சவாரி பாரிய ஊக்குவிப்புப் பிரசாரத்தின் 19வது பதிப்பின் மாபெரும் பரிசு வெற்றியாளர்கள், சீனாவின் மிகவும் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களையும் கலாசார சிறப்பம்சங்களையும் அனுபவித்த நிலையில் தமது மறக்க முடியாத பெய்ஜிங் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர். 

இந்த சுற்றுலாவிற்கான அனைத்து செலவுகளும் செலிங்கோ நிறுவனத்தினால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில், வெற்றி பெற்ற ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 20 பேர் கலந்து கொண்டு, சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைநகரமான பெய்ஜிங்கை சுற்றிப்பார்க்கும் வகையில் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட பயணத்தில் கலந்து கொண்டனர். இந்தப் பயணத்தில் செலிங்கோ லைஃப்பின் வர்த்தகநாம தூதுவரான ரோஷன் ரணவனவும் அவரது குடும்பத்தினரும் இணைந்திருந்தது, பங்கேற்பாளர்களிடையே அன்பும் நட்புறவும் நிறைந்த ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கியது. 

இந்த சுற்றுலா திட்டமானது வரலாறு, கலாசாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்ததாக அமைந்திருந்தது. இதில் பங்கேற்பாளர்கள், அழகிய கேபிள் கார் பயணத்தின் மூலம் மியூட்டியான்யு நுழைவாயில் வழியாக அணுகக்கூடிய உலகப் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவர், மற்றும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காக அமைக்கப்பட்ட ஒலிம்பிக் மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர். மேலும், அவர்கள் தியான்மென் சதுக்கம், தடைசெய்யப்பட்ட நகரம் (Summer Palace) மற்றும் கோடைக்கால அரண்மனை (Forbidden City) ஆகியவற்றையும் பார்வையிட்டு, சீனாவின் வளமான பேரரசு மரபைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றனர். 

இந்தப் பயணத்திற்கு மேலும் பல்வகைச் சிறப்பைச் சேர்க்கும் வகையில், ஜேட் கல் உற்பத்தி நிலையம், பாண்டா விலங்குக் காட்சிச்சாலை மற்றும் தொழில் முறையில் நடத்தப்பட்ட அக்ரோபாட்டிக் (Acrobatic) கலை நிகழ்ச்சி ஆகியவற்றிற்கும் விஜயங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதோடு, பாரம்பரிய சீன உணவுகளைச் சுவைக்கும் வாய்ப்பும், ஷொப்பிங் செய்வதற்கான ஓய்வு நேரமும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. 

பெய்ஜிங் சுற்றுலா, குடும்ப சவாரி 19 திட்டத்தின் உச்சகட்டப் பரிசாக அமைந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாபெரும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து காப்புறுதிதாரர் குடும்பங்களுக்கு இந்த பிரத்தி யேக வெளிநாட்டு விடுமுறைப் பயணம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வெற்றியாளர்கள் நிறுவனத்தின் வென்னப்புவ, களனி,கொடக்கா வெல, கம்புறுபிட்டிய, மற்றும் ஹோமாகம ஆகிய கிளைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். 

2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப சவாரியானது, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் மிகப் பாரியதாகவும் நீண்டகாலமாக வெற்றிகரமாக இயங்கி வரும் நம்பகமான வெகுமதித் திட்டமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 11,000- க்கும் மேற்பட்ட காப்புறுதிதரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 37,000-க்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் இனிய அனுபவங்களையும் அர்த்தமுள்ள வெகுமதிகளையும் வழங்குவதால் இந்த நிகழ்வானது தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. மேலும், இது செலிங்கோ லைஃப் மற்றும் அதன் காப்புறுதிதாரர்களிடையே நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் திகழ்கிறது. 

செலிங்கோ லைஃப்பானது, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் திகழ்ந்து வருகிறது. World Finance நிறுவனத்தால் தொடர்ந்து 12வது ஆண்டாக இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 20வது ஆண்டாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆண்டுக்கான மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (‘People’s Life Insurance Service Provider of the Year’) விருதையும் பெற்றுள்ளது. காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை பாதுகாத்து, இடர்களைக் குறைக்கும் புத்தாக்கமான காப்புறுதி தீர்வுகளை செலிங்கோ லைஃப் வழங்கி வருகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டில் Brand Finance வெளியிட்ட மதிப்பீட்டின்படி, செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாகவும், நாட்டின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வர்த்தகநாமங்களில் 22வது மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278