Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
மிகவும் அவசியமான நேரத்தில் பாதுகாப்பு பெறும் வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் ஜனசக்தி லைஃப் உடன் இணையும் வயதை 80 ஆக உயர்த்துகிறது

Jun 16, 2026 - 02:18 PM

மிகவும் அவசியமான நேரத்தில் பாதுகாப்பு பெறும் வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் ஜனசக்தி லைஃப் உடன் இணையும் வயதை 80 ஆக உயர்த்துகிறது
Mobitel Inner 1278

காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், ஆயுள் காப்புறுதித் துறையில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கும் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக இலங்கை வாடிக்கையாளர்களிற்கு பாரம்பரிய வயது வரம்புகளுக்கு அப்பாற்பட்ட நன்மைகளை வழங்கும் நீண்டகால நிதிப் பாதுகாப்பை அறிமுகப்படுத்தி புதிய வரையறையை உருவாக்கியுள்ளது. 

உள்நாட்டு காப்புறுதித் துறையில் முதன் முறையாக, ஜனசக்தி லைஃப் தற்போது 80 வயது வரை ஆயுள் காப்புறுதித் தகுதியை வழங்குகிறது. இது தற்போது சந்தையில் நிலவும் 65 முதல் 70 வயது வரையிலான காப்புறுதித் தகுதியை விட குறிப்பிடத்தக்களவு அதிகமாகும். மேலும், இத் திட்டம் ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பையும் 90 வயது வரையான முதிர்வுப் பலன்களையும் வழங்குவதால் நீண்ட காலப் பாதுகாப்பும் நிதித் தொடர்ச்சியும் உறுதி செய்யப்படுகிறது. 

இலங்கையின் மாறிவரும் மக்கள்தொகைச் சூழலுக்கு ஏற்ப இம் முன்னோடித் தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் ஆயுட்கால எதிர்பார்ப்பு மற்றும் பெருகிவரும் முதியோர் சனத்தொகை ஆகியவை நிதித் திட்டமிடல் தேவைகளை மறுவடிவமைத்து வருகின்றன. இத் தீர்வு, வயது முதிர்ந்த பின்னரும் நிதிப் பாதுகாப்பு, மதிப்புமிக்க வாழ்க்கை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை நாடும் முதியோர்களுக்கான பாதுகாப்பில் அதிகரித்து வரும் இடைவெளியை பூர்த்தி செய்கிறது. 

காப்புறுதித் திட்ட அறிமுக நிகழ்வில் உரையாற்றிய ஜனசக்தி லைஃப்பின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கூறுகையில், “ஆயுட்கால எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்றைய சமூகத்தின் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் காப்புறுதியும் மேம்படுத்தப்பட வேண்டும். ஜனசக்தி லைஃப்பில், எமது நோக்கம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களின் கனவுகளை வலுப்படுத்துவதாகும். அதற்காக, நெறிமுறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் எமது பங்குதாரர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதுடன், அவர்களுக்கு மிகவும் முக்கியமானவற்றை பாதுகாக்கும் நம்பிக்கைக்குரிய பங்காளராகத் தொடர்ந்தும் செயற்படுகின்றோம். கோவிட் காப்பீடு, எய்ட்ஸ் காப்பீடு மற்றும் இராணுவக் காப்பீடு போன்ற தீர்வுகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதன் மூலம் புதுமைகளின் வழியாக நாங்கள் இத் துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறோம். இது உண்மையான மற்றும் மாறிவரும் தேவைகளுக்குப் பதிலளிக்கும் பாதுகாப்பை வடிவமைப்பதில் எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.” 

அவர் மேலும் கூறியதாவது, “இப் புத்தாக்கமானது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்டகால உத்தரவாதம், அணுகல் மற்றும் அர்த்தமுள்ள பாதுகாப்பை வழங்குவதில் எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. தகுதியை 80 வயது வரை நீடித்தல் மற்றும் 90 வயது வரை ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் முதிர்வு நன்மைகளை வழங்குவதன் மூலம் நிதிப் பாதுகாப்பு மிக அவசியமாகத் தேவைப்படும் பிற்கால வாழ்க்கைக் கட்டங்களிலும் அது தொடர்ந்தும் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.” என்றார். 

கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையின் முதியோர் சனத்தொகை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. 2012 மற்றும் 2024 இற்கு இடையில், 70-79 வயதுக்குட்பட்ட சனத்தொகை கிட்டத்தட்ட 90% ஆல் அதிகரித்துள்ளது, அதே வேளை, 80-89 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 63% இற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. இது ஆயுட்கால எதிர்பார்ப்பில் சீரான அதிகரிப்பையும், தெளிவான முதியோர் சனத்தொகைப் போக்கையும் பிரதிபலிக்கிறது. இப் போக்குகள் வழமையான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிதிப் பாதுகாப்புத் தீர்வுகளின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

பிற்கால வாழ்க்கை கட்டங்களுக்கு காப்புறுதியையும் அதன் நன்மைகளையும் விரிவுபடுத்துவதன் மூலம் காப்புறுதியை பொருத்தமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், உண்மையான சமூகத் தேவைகளுக்கு ஏற்ப பதிலளிப்பதாகவும் மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனசக்தி லைஃப் மேலும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம், மிகவும் அவசியமான நேரத்தில் பாதுகாப்பு தொடர்வதை உறுதி செய்கிறது. அனைவருக்கும் காப்புறுதியை கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட ஜனசக்தி லைஃப், இலங்கை முழுவதும் நீண்டகாலப் பாதுகாப்பு, புதுமை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இச் சமீபத்திய திட்ட அறிமுகமானது, தனது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் நாட்டின் மாறிவரும் சனத்தொகை அமைப்புக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக்கொள்ள உறுதிபூண்டுள்ள தொலைநோக்குப் பார்வையுடைய காப்புறுதி நிறுவனம் என்ற அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. 

ஜனசக்தி லைஃப் பற்றி 

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. 

இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. 

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி - https://www.janashakthi.com/

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278