Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
சஞ்சிதா - சுஷாந்த் சிங் மரணங்களுக்கு இடையே தொடர்பா?

Jun 16, 2026 - 11:58 AM

சஞ்சிதா - சுஷாந்த் சிங் மரணங்களுக்கு இடையே தொடர்பா?
Mobitel Inner 1278

இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை சஞ்சிதா உகாலே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் மிகவும் பிரபலமானவர். வெப் தொடர்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். பாலிவுட் திரையுலகில் நடிகர் விக்கி கவுஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற சாவா திரைப்படத்தில் நடிகை சஞ்சிதா உகாலே நடித்திருந்தார். 

இந்த நிலையில், மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகை சஞ்சிதா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த இவர், வீட்டில் ஆள் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆனால், நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. 

நடிகை சஞ்சிதாவின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். சஞ்சிதா தற்கொலை செய்துகொண்ட தினம் கடந்த ஜூன் 14 ஆம் திகதி 2026. இதே நாளில் 6 ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார். 

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே தேதியில் நடந்துள்ள நிலையில், சஞ்சிதா உகாலேவின் சகோதரர் ஆகாஷ், இந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார். அதில், "சுஷாந்த் சிங் ராஜ்புட் 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி அங்கு தற்கொலை செய்துகொண்டார். 

ஏன்? ஏனென்றால், பாலிவுட் அவர் மீது மிகுந்த அழுத்தத்தை கொடுத்தது. அந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் தான் நேற்று என் சகோதரியும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார்" என கூறியுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278