Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ஒரே வீட்டில் முதலமைச்சர் விஜய் - சங்கீதா?

Jun 9, 2026 - 01:52 PM

ஒரே வீட்டில் முதலமைச்சர் விஜய் - சங்கீதா?
Mobitel Inner 1278

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவினர்களின் முயற்சியால் இந்த இணைவு சாத்தியமானதாக கூறப்படுகிறது. 

தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியிருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் குடும்ப வாழ்வுதான். கடந்த சில காலங்களாக இவர்களைப் பற்றி பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது தம்பதியினர் மீண்டும் ஒரே வீட்டில் இணைந்து வாழத் தொடங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியையும், புது உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த விஜய், கடந்த காலங்களில் தனது அரசியல் மற்றும் சினிமா பயணங்களில் தீவிரமாக இருந்தபோது, அவருக்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் உலா வந்தன. சங்கீதா லண்டனில் தங்கியிருந்ததும், விஜய்யின் முக்கிய பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளாததும் இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தன. இதனால் இவர்களது குடும்ப வாழ்க்கை என்னவாகுமோ என்ற கவலை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. 

இந்நிலையில், இந்த குடும்பப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நெருங்கிய குடும்ப உறவுகள் தீவிர முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. 

எந்தவொரு பெரிய அரசியல் பயணத்திற்கும் குடும்பத்தின் நிம்மதியும், ஆதரவும் மிக முக்கியம் என்பதை உணர்ந்த பெரியவர்கள், இருதரப்பிடமும் பேசி மனக்கசப்புகளை நீக்கியுள்ளனர். குறிப்பாக, கணவன்-மனைவி இருவருக்குள்ளும் இருந்த ஈகோ மற்றும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவர்களை மீண்டும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதில் உறவினர்களின் பங்களிப்பு முக்கியமானது எனத் தெரியவருகிறது. 

தற்போது சங்கீதா சென்னை திரும்பயுள்ளதாகவும், இருவரும் தங்களது நீலாங்கரை இல்லத்தில் இணைந்து வாழத் தொடங்கியள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த செய்தி வெளியானதிலிருந்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் "தலைவன் குடும்பம் ஒன்று சேர்ந்துவிட்டது" எனக் கூறி, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். 

ஒரு தலைவனின் குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும்போது, அவரால் முழு கவனத்தையும் மக்கள் பணியில் செலுத்த முடியும் என்று தொண்டர்கள் நம்புகின்றனர். 

"எல்லா பிரச்சினையும் முடிந்துவிட்டது" என்ற இந்த பாசிட்டிவ் செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. குடும்ப உறவுகளின் சாதுரியமான தலையீட்டால் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படும் இந்த நிகழ்வு, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிக பாசிட்டிவான திருப்பமாக அமைந்து, தவெக தொண்டர்களை துள்ளிக்குதிக்க வைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278