Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
04
கொழும்பு துறைமுக நகரம் – தெளிவான தகைமை மற்றும் அனுமதியளிப்பு கட்டமைப்புடன் விதிமுறை அடிப்படையிலான சலுகைகள் ஒழுக்கமான, நோக்கத்தின் அடிப்படையில் செயலாற்

கொழும்பு துறைமுக நகரம் – தெளிவான தகைமை மற்றும் அனுமதியளிப்பு கட்டமைப்புடன் விதிமுறை அடிப்படையிலான சலுகைகள் ஒழுக்கமான, நோக்கத்தின் அடிப்படையில் செயலாற்

Nov 9, 2026 - 02:53 PM

காணொளி
மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

அறிவார்ந்த உழைப்புச் சுரண்டலை உடனடியாக நிறுத்து!

அறிவார்ந்த உழைப்புச் சுரண்டலை உடனடியாக நிறுத்து!

தமிழனாக இருக்கவே வெட்கப்படுகிறேன்

தமிழனாக இருக்கவே வெட்கப்படுகிறேன்

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

சிறப்புத் தீபாவளிப் பூஜை!

சிறப்புத் தீபாவளிப் பூஜை!

வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்!

வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்!

மீனவர்களையும் வாழ விடுங்கள்!

மீனவர்களையும் வாழ விடுங்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

    Mobitel Inner 1278

    பிரபல மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தனது தாயார் குறித்து மனம் திறந்துள்ளார். தான் சினிமா துறையில் நுழைவது குறித்து தனது தாய் ஸ்ரீதேவி ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும், ஆனால் தான் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர்தான் தன் திறமை மீது அவருக்கு நம்பிக்கை வந்ததாகவும் ஜான்வி கபூர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.


    தமது தாயார் ஸ்ரீதேவியின் நினைவுகள் மற்றும் தனது திரையுலகப் பயணம் குறித்து தனது உறவினரான மகேஸ்வரியுடன் ஜான்வி கபூர் உரையாடியுள்ளார். அப்போது, தான் நடிகையாக விரும்புவதாகத் தெரிவித்த போது ஸ்ரீதேவியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.


    நடிக்க வேண்டுமெனில் தனது முழு வாழ்க்கையையும் அதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி தன்னிடம் நிபந்தனை விதித்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், சினிமாவில் உள்ள கடுமையான உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்த்து ஸ்ரீதேவி தொடக்கத்தில் தயக்கம் காட்டியதாக மகேஸ்வரியும் அந்த உரையாடலின் போது தெரிவித்தார்.


    இந்த உரையாடலின் ஒரு கட்டத்தில், தனது தாயாரின் பார்வையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ஜான்வி கபூர் வெளிப்படையாகப் பேசினார். தான் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பு வரை தனது சினிமா ஆசைகள் குறித்து ஸ்ரீதேவி உறுதியான நம்பிக்கையுடன் இல்லை என்றும், ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் தன்மிடம் நடிப்புக்கான திறமை இருப்பதாக அவர் நம்பத் தொடங்கினார் என்றும் அவர் தெரிவித்தார். குடும்பத்தில் பலரும் இது போன்ற அனுபவங்களைக் கடந்து வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


    குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இது போன்ற அழகு திருத்தங்களைச் செய்துகொண்டுள்ளதை ஜான்வி சுட்டிக்காட்டினார். முன்னதாக, ஜான்வியின் தங்கையான குஷி கபூரும் தனது அழகு சாதன அறுவை சிகிச்சைகள் குறித்த வதந்திகளுக்கு வெளிப்படையாகப் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


    இளம் தலைமுறையினர் மத்தியில் unrealistic beauty standards எனப்படும் சாத்தியமற்ற அழகு பற்றிய கற்பனைகள். அதாவது யாராலும் எளிதில் அடைய முடியாத உடல் தோற்றம், நிறம், ஒல்லியான உடல்வாகு போன்றவற்றை அழகு என்று பிரபலங்கள் ஊக்குவிக்கக் கூடாது என்றும், இதுபோன்ற விஷயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் குஷி கபூர் அண்மையில் வலியுறுத்தியிருந்தது கவனிக்கத்தக்கது.