Nov 8, 2026 - 05:41 PM

கொழும்பு - இரத்தினபுரி, அவிசாவளை பிரதான வீதியின் மாதொல பகுதியில் வீதிக்கு குறுக்கே பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) இடம்பெற்ற இந்த விபத்தினால் வீதியின் ஒரு மருங்கிற்கான போக்குவரத்து தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதன் காரணமாக, பயணிகள் மற்றும் சாரதிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் வீதியில் விழுந்துள்ள மரத்தை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதுடன், போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
































