Nov 7, 2026 - 10:13 PM

போலந்தின் - கிராகோவ் (Krakow) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக போலந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரின் முக்கிய சந்தை சதுக்கத்தில் (Main Market Square) இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்புச் சேவையினர் விரைந்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் பொலிஸாரால் சுடப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), இது ஒரு துயரமான சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், நிலவரங்கள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
































