Nov 7, 2026 - 09:31 PM

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட எச்சரிக்கை (அவதானமாக இருக்க வேண்டியவை):
நுவரெலியா மாவட்டம் (நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகள்)
கண்டி மாவட்டம் (உடுதும்புர பிரதேச செயலகப் பிரிவு)
முதலாம் கட்ட எச்சரிக்கை (விழிப்புடன் இருக்க வேண்டியவை):
பதுளை மாவட்டம் (மீகஹகிவுல)
காலி மாவட்டம் (தவலம மற்றும் நாகொட)
நுவரெலியா மாவட்டம் (மதுரட்ட, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு மற்றும் ஹங்குராங்கெத்த)
மாத்தறை மாவட்டம் (பஸ்கொட)
மொனராகலை மாவட்டம் (வெல்லவாய)
கண்டி மாவட்டம் (தும்பனே மற்றும் மினிப்பே)
கேகாலை மாவட்டம் (அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, ருவன்வெல்ல, கேகாலை மற்றும் வரக்காப்பொல)
இரத்தினபுரி மாவட்டம் (கொடகவெல, கொலொன்ன, வெலிகேபொல மற்றும் பலாங்கொடை)
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது நாளை (8) இரவு 8 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு அபாயம் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
































