Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

    Mobitel Inner 1278

    இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.


    மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பணியாற்றியவருமான ஏவிஎம் ஆர். சுதர்சனத்தின் மகன் சதானந்தம். சதா மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் திரையிசையில் முன்னணி கிட்டார் கலைஞராகத் திகழ்ந்தார்.


    இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், ‘அன்னக்கிளி’ திரைப்படம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாகப் பல பாடல்களுக்கு கிட்டார் இசை வாசித்துள்ளார். இவரது இசைப் பங்களிப்பு பல புகழ்பெற்ற பாடல்களின் சிறப்பான இசை அமைப்பில் முக்கிய இடம் பெற்றது. ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட பாடல்களில் இவரது கிட்டார் இசை ரசிகர்களைக் கவர்ந்தது.


    திரைப்படப் பாடல்களுடன், பின்னணி இசையிலும் சதா மாஸ்டர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி, பல்வேறு இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.


    திரைப்படங்களுக்கு இசை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து கிட்டார் வாசித்து வந்தார் சதா மாஸ்டர். தனது நீண்டகால இசைப் பயணத்தின் மூலம் தமிழ் திரையிசைக்கு அவர் அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.


    இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இசைக் கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.