Oct 29, 2026 - 03:59 PM

கழிவு முகாமைத்துவம் மற்றும் சுழற்சிப் பொருளாதாரத் தீர்வுகள் ஆகியவற்றில் முன்னணியில் திகழும் சுற்றுச்சூழல் தீர்வுகள் வழங்குநரான INSEE Ecocycle Lanka, தனது முதலாவது முழுமையான மின்சாரத்தில் இயங்கும் கழிவு சேகரிப்பு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “හරිතවත් ගමනක්” (பசுமையான பயணம்) என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த அறிமுகம், கழிவு சேகரிப்பு வாகனத் தொகுதியை படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டத்தின் முதல் படியாக அமைந்துள்ளது.
கட்டுநாயக்காவில் அமைந்துள்ள INSEE Ecocycle Lanka வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நிறுவனத்தின் பணிப்பாளர் Eng. சுஜித் குணவர்த்தன முன்னிலையில் முதலாவது வாகனம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மின்சாரத்தில் இயங்கும் கழிவு சேகரிப்பு வாகனங்களைப் பயன்படுத்தும் INSEE Ecocycle Lanka நிறுவனத்தின் இந்த முயற்சி, அதன் போக்குவரத்து மற்றும் logistics செயற்பாடுகளிலிருந்து வெளியாகும் காபன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் முக்கிய முன்னேற்றமாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், தனது செயற்பாடுகளால் ஏற்படும் வெளியேற்றங்களையும், முகாமைத்துவம் செய்யப்படும் கழிவுகளின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் சுழற்சியுடன் தொடர்புடைய காபன் தடத்தையும் குறைப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இம்முயற்சி, ISO தரச்சான்றிதழ் பெற்ற INSEE Ecocycle Lankaஇன் ஒருங்கிணைந்த முகாமைத்துவக் கட்டமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலைபேறான செயற்பாடுகள் தொடர்பான உறுதிமொழிகளையும் வலுப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புணர்வை மதிப்புச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் நடைமுறைப்படுத்தக்கூடியதும் அளவிடக்கூடியதுமான நடவடிக்கைகளாக மாற்றுவதன் மூலம் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த மைல்கல் குறித்து கருத்துத் தெரிவித்த INSEE Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eng. துசித் குணவர்ணசூரிய, “எமது செயற்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் நிலைபேறான நடைமுறைகளை உள்ளடக்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது. கழிவு சேகரிப்பு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவது என்பது வாகனத் தொகுதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மட்டுமல்ல. குறைந்த காபன் வெளியேற்றத்தைக் கொண்ட எதிர்காலத்தை நோக்கிய எமது பயணத்திலும், பங்குதாரர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நீண்டகாலப் பயன்களை உருவாக்க வேண்டும் என்ற எமது நோக்கத்திலும் இது ஒரு முக்கியமான நடைமுறை முன்னெடுப்பாகும்.” என்றார்.
INSEE Ecocycle Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘හරිතවත් ගමනක්’ என்ற தொனிப்பொருள், எமது செயற்பாடுகளின் ஒவ்வொரு அம்சத்திலும் நிலைபேறான நடைமுறைகளை உள்ளடக்குவதுடன் இலங்கை முழுவதும் நிலைபேறான சுற்றுச்சூழல் தீர்வுகளை வழங்குவதை துரிதப்படுத்த நாம் கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது. தூய்மையான கழிவுப் போக்குவரத்து, குறைந்த வெளியேற்றம் மற்றும் வளங்களைப் பொறுப்புடன் முகாமைத்துவம் செய்தல் ஆகியவற்றை நோக்கிய பரந்த மாற்றத்தின் ஆரம்பமாக இந்த மைல்கல் அமைகிறது. இதன் மூலம், எதிர்காலத் தலைமுறையினருக்கு ஆரோக்கியமானதும் நிலைபேறானதுமான சூழலை உருவாக்குவதற்குப் பங்களிக்க முடியும்.” என்றார்.
இந்த முயற்சியின் மூலம், பொறுப்பான கழிவு முகாமைத்துவம், வளங்களை மீட்டெடுத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தி, INSEE Ecocycle Lanka தனது நிலைபேறான பயணத்தில் மற்றுமொரு முக்கிய படியை எடுத்துள்ளது. அதேவேளை, தூய்மையான, பசுமையான மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்க பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்துக்கும் நிறுவனம் பங்களிக்கிறது.

































