Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

    Mobitel Inner 1278

    சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான பராசக்தி, மதராஸி ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைதான் பெற்றிருந்தன.


    எனவே இதை மெகா ஹிட்டாக கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உழைத்து வருகிறார்கள். சூழல் இப்படி இருக்க படத்தின் ரீ ஷூட் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் வந்து ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் இப்போது உயரத்தில் இருக்கிறார்.


    வரிசையாக வெற்றியை பார்த்த அவர், பிரின்ஸ் படத்தில் தோல்வியை சந்தித்தார். இனிமேல் அவர் கதை சினிமாவில் முடிந்துவிட்டது என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அவரோ மாவீரன், அயலான், அமரன் என சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார்.

    அதுவும் அமரன் படத்தின் மெகா வெற்றி அவரை கோலிவுட்டின் டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் நீக்க முடியாத இடத்தை கொடுத்துவிட்டது.


    அந்தப் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்தார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், தரமான சம்பவம் செய்யும், இதுவரை இல்லாத அளவுக்கு விவாதத்தை கிளப்பும் என்றெல்லாம் ஹைப்புகள் ஏற்றப்பட்டன.


    ஆனால் அந்த அளவுக்கு படத்தில் ஒன்றும் இல்லை. இதற்கிடையே வெங்கட் பிரபுவுடன் ஒரு படத்தில் அவர் இணையவிருப்பதாக சொல்லப்பட்டது. சில காரணங்களால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது.


    அதற்கு பதிலாக இப்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்கிறார். படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஏற்கனவே அமரன் படம் எஸ்கே - கமல் கூட்டணியில்தான் வெளியானது. அது மாதிரியே இதுவும் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.


    அத்தனைக்கும் மேலே இயக்குநர் சிவக்குமார் முருகேசன்தான் இந்தப் படத்தின் தூண் ஆவார். அவர் இயக்கத்தில் வெளியான தாய் கிழவி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ராதிகாவுக்கு அப்படி ஒரு படம் கொடுத்த சிவக்குமார், கமர்ஷியல் ஹீரோவாக சிவகார்த்திகேயனுக்கும் தரமான படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    சீமான் உள்ளிட்டோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். பராசக்தி, மதராஸி ஆகிய படங்களின் சறுக்கல்களுக்கு இதில் பதிலடி கொடுப்பார் என்றும் நம்பலாம். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அதேசமயம் சில போர்ஷனை இயக்குநர் ரீ ஷூட் செய்கிறார் என்றும் தகவல்கள் வந்தன.


    அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேசுகையில், "தாய் கிழவி படத்தை சிவக்குமார் சீக்கிரமே எடுத்து முடித்தவர்தான். பெரிய ஹீரோவிடம் வரும்போது ஒன்று இவர் குழம்பியிருக்க வேண்டும் அல்லது ஹீரோ குழப்பியிருக்க வேண்டும். இது இரண்டில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது.


    ஷூட்டிங்கில் சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்பட்டன. இதுவரை எடுத்ததை போட்டு பார்த்த பிறகு கமல்ஹாசனே ரீ ஷூட் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால்தான் இந்த அளவுக்கு தாமதம். கேமரா மேன், ஃபைட் மாஸ்டர் ஆகியோரையும் மாற்றினார்கள். அதனால்தான் இந்தப் படத்துக்கு இவ்வளவு தாமதம். இப்போது ஷூட்டிங் சுமூகமாகத்தான் போகிறது" என்றார்