Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
06
வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவக் கருத்தரங்கத்தில் இலங்கையில் மார்பக பராமரிப்பிற்கான தரநிலையை மேம்படுத்தும் ஹேமாஸ் மருத்துவமனை வத்தளை

வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவக் கருத்தரங்கத்தில் இலங்கையில் மார்பக பராமரிப்பிற்கான தரநிலையை மேம்படுத்தும் ஹேமாஸ் மருத்துவமனை வத்தளை

Oct 29, 2026 - 02:43 PM

காணொளி
மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

    Mobitel Inner 1278

    இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், ராஜம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கொண்டம்பேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம ராஜு. இவரது மனைவி லலிதா குமாரி. கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


    திருமணத்துக்குப் பிறகு படிக்க வேண்டும் என விரும்பிய மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சீதாராம ராஜு, அவரைப் பி.டெக் படிக்க வைத்திருக்கிறார். இதன் பலனாக, 2017 ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்திருக்கிறார் லலிதா குமாரி.


    ஆனால், மனைவியின் இந்த வளர்ச்சியே குடும்பத்தில் பிரச்னைக்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது. பணியின் காரணமாக உடன் வேலை செய்யும் ஆண்களுடன் லலிதா குமாரி சகஜமாகப் பேசுவதை, கணவர் சீதாராம ராஜுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.


    இதனால், மற்ற ஆண்களுடன் பேசக்கூடாது என மனைவிக்குக் கட்டுப்பாடு விதித்திருக்கிறார். வேலை சார்ந்த உரையாடல்களைக்கூட தவிர்க்க முடியாத சூழலில் இருந்த லலிதா குமாரிக்கும், சீதாராம ராஜுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.


    இதனால் மனமுடைந்த லலிதா குமாரி, இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு அவ்வப்போது தனது தாய் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்து வேலைக்குச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் சீதாராம ராஜு, மனைவியுடன் சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.


    ஆனால், இந்தப் பிரச்னை மட்டும் முடிவுக்கு வரவில்லை. மனைவி தனது கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த சீதாராம ராஜு, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.


    இதற்காக வெட்டுக் கோடாலி ஒன்றை வாங்கி, ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருக்கிறார். இந்நிலையில், அக்டோபர் 26 ஆம் திகதி இரவு மீண்டும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, மறுநாள் காலை தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிடப் போவதாக லலிதா குமாரி கூறியிருக்கிறார்.


    இதையடுத்து, மறுநாள் காலையில் தாய் வீட்டுக்குப் புறப்பட்ட மனைவியை, பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றிருக்கிறார் சீதாராம ராஜு. ஆனால், அவர் அழைத்துச் சென்றது, ஏற்கெனவே கோடாலியைப் பதுக்கி வைத்திருந்த சுடுகாட்டுப்பகுதி என்பது மனைவிக்குத் தெரிந்திருக்கவில்லை.


    குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ஸ்கூட்டரை நிறுத்திய சீதாராம ராஜு, மறைத்து வைத்திருந்த கோடாலியை எடுத்து வந்து லலிதா குமாரியின் தலையிலேயே சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.


    பலத்த வெட்டுக்காயமடைந்த லலிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். கொலையை மறைக்கத் திட்டமிட்ட சீதாராம ராஜு, மனைவியின் உடலைச் வீதியோரத்தில் போட்டுவிட்டு, அருகில் ஸ்கூட்டரையும் தொலைபேசியையும் வைத்திருக்கிறார். பின்னர், அடையாளம் தெரியாத வாகனம் தங்களது ஸ்கூட்டர் மீது மோதிவிட்டதாகவும், அந்த விபத்தில் மனைவி உயிரிழந்துவிட்டதாகவும் கூறி பொலிஸாரிடம் நாடகமாடியிருக்கிறார்.


    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், லலிதா குமாரியின் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது தலையில் இருந்த காயங்கள் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதையடுத்து, கணவர் சீதாராம ராஜுவை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.


    தொடர்ந்து அவரைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவி உயிரிழந்த நிலையில், தந்தையும் சிறைக்குச் சென்றதால், இந்தத் தம்பதியின் இரண்டு குழந்தைகளும் தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மனைவியின் படிப்புக்கு ஆதரவளித்த கணவனே, அவரது வளர்ச்சிக்குப் பிறகு சந்தேகத்தாலும் கட்டுப்படுத்தும் மனப்பான்மையாலும் கொலை செய்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.