Oct 29, 2026 - 11:03 AM
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா' இன்று (29) மட்டக்களப்பு "கோல்டன் ரிவர்" விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகரசபையின் முல்வர் சிவம்பாக்கியநாதன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது இளங்கலைஞர் விருதுகளும் 11பேர் நூல்களுக்கான சிறந்த எழுத்தாளர் விருதினையும் 17 கலைஞர்கள் இவ்வாண்டுக்கான வித்தகர் விருதுகளையும் இதன்போது பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது மூன்று இனங்களினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

































