Oct 12, 2026 - 07:29 PM

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்த பத்தா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 01 ஆம் திகதி வெளியான திரைப்படம் பத்தா.
இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, சினி 1 ஸ்டூடியோ, A for Apple ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், சாய், சஹஸ்ர ஸ்ரீ, சாண்டி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மக்கள் பாசிட்டிவான விமர்சனங்களை இப்படத்திற்கு தெரிவித்து வரும் நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த 11 நாட்களில் உலகளவில் பத்தா திரைப்படம் 34 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.






























