Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
விளையாட்டு
திறமை மட்டும் போதாது!

Oct 5, 2026 - 05:34 PM

திறமை மட்டும் போதாது!
Mobitel Inner 1278

சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடக்க வீரராகக் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 

சிறந்த ஃபார்மில் இருக்கும் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பளிக்கப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்து வந்தன. இது குறித்துப் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், "அணிக்குத் தேர்வாக திறமை மட்டும் போதாது, சில நேரங்களில் வாய்ப்புக்காகக் காத்திருக்கவும் பழக வேண்டும்" என்று வைபவ் சூர்யவன்ஷியிடம் பேசிப் புரிய வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிப்பதே சரியான முடிவாக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

'JioStar' தளத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், சமூக வலைதளங்களின் அழுத்தமோ அல்லது வெளிப்புற விமர்சனங்களோ அணியின் விளையாடும் லெவனை தீர்மானிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

டிரெசிங் ரூமில் இருக்கும் பயிற்சியாளரும் கேப்டனும் எந்த வீரர் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார் மற்றும் எது சிறந்த கலவையாக இருக்கும் என்று கருதுகிறார்களோ, அதனடிப்படப்படையிலேயே அணி தேர்வு அமையும் என்றார். வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் திறமையாளர்களுக்குப் புரியவைப்பது தமக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்ததாகவும், அதே சமயம் திறமை இருந்தாலும் முன்னணி வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வழங்கி வரும் வரை வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியது அவசியம் என்பதை அவரிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் கம்பீர் கூறினார். 

சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடக்க வீரராகக் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதைப் பற்றிப் பேசிய கம்பீர், வைபவை அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகக் கடந்த ஒன்றரை முதல் 2 ஆண்டுகளாகத் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் சர்மா ஆகிய இருவரில் யாராவது ஒருவரை நீக்கினால், அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற கேள்வி எழும் என்றார். 

மூன்று அல்லது நான்கு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காகவே நீண்ட காலமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீரர்களைத் திடீரென நீக்கிவிட்டு புதியவரைச் சேர்ப்பது அணிக்குள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278