Oct 5, 2026 - 04:05 PM

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹட்ச் ஆனது [HUTCH], இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்துடன் [Sri Lanka Institute of Marketing - SLIM) இணைந்து, நாட்டின் முன்னணி நான்கு விருது மற்றும் அங்கீகாரத் தளங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. இதன்கீழ், சிறந்த விற்பனை நடைமுறைகளையும் அவற்றின் வெற்றிகரமான பெறுபேறுகளையும் அங்கீகரிக்கும் தேசிய விற்பனை விருதுகள் [National Sales Awards], டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் புத்தாக்கத்தை கௌரவிக்கும் SLIM Digi விருதுகள், சந்தைப்படுத்தல், விற்பனை, புத்தாக்கம் மற்றும் நிலையான வர்த்தக நடைமுறைகளில் சிறந்து விளங்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) கௌரவிக்கும் SME அபிவிருத்தி விருதுகள் [SME Development Awards], அத்துடன் உத்திசார் சிந்தனை, சிறப்பான செயற்படுத்தல், குழுப்பணி மற்றும் பெறுபேறுகளை மதிப்பிடும் Effie விருதுகள் ஆகிய நான்கு விருது மேடைகளும் இதில் அடங்குகின்றன. இந்தப் பங்குடைமையின் மூலம், நிறுவனங்கள் தமது வர்த்தக வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு சந்தைப்படுத்தலின் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதுடன், வலுவான வர்த்தகச் சூழலை உருவாக்குவதற்கும் ஹட்ச் தனது ஆதரவை வழங்குகிறது.
இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையின் முன்னணி தொழில்முறை அமைப்பாக செயல்படும் SLIM, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் மூலம், வர்த்தகத்தலைவர்கள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத்துறை நிபுணர்கள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், நிறுவனங்களின் முக்கிய தீர்மானம் எடுப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைக்கிறது. SLIM உடனான இந்தப் பங்குடைமையின் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்து வரும் தனிநபர்களையும் வர்த்தக நிறுவனங்களையும் ஹட்ச் ஊக்குவித்து கௌரவிக்கிறது. இதன் ஊடாக விற்பனை, சந்தைப்படுத்தல் திறன் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் சாதனைகள் பல்வேறு விருது மேடைகளில் அங்கீகரிக்கப்படுகின்றன.
உலகின் Fortune 500 நிறுவனங்களில் ஒன்றான CK Hutchison Holdings நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் ஹட்ச் பெரிய நிறுவனங்கள், சிறு தொழில்கள் மற்றும் ஆரம்பநிலை நிறுவனங்கள் தமது டிஜிட்டல் வளர்ச்சியையும் வர்த்தக விரிவாக்கத்தையும் மேம்படுத்துவதற்கு உதவும் நிறுவன தீர்வு சேவைகளை வழங்கி வருகிறது. அனைவரும் எளிதில் அணுகக் கூடியதும் செலவுச் சுமையை கருத்தில் கொண்டதுமான தீர்வுகளை வழங்கி, ஒவ்வொரு நிறுவனமும் தனது வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும்.
இது குறித்து இலங்கை சந்தைப்படுத்தல் (SLIM) நிறுவனத்தின் நிகழ்வுகள் மற்றும் நிலைத்தன்மை பிரிவின் துணைத்தலைவரான ராஜீவ் டேவிட் தெரிவிக்கையில்;“தொலைத்தொடர்பு துறையைத் தாண்டி, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஹட்ச் உடன் இணைந்து செயல்படுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அறிவு, புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகளவில் அணுகுவதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்த வேண்டும் என்ற எமது இரு நிறுவனங்களின் ஒரே நோக்கத்தை இந்த பங்குடைமையானது பிரதிபலிக்கிறது.”
இது தொடர்பாக ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்திஹஸன் தெரிவிக்கையில்;“இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் தனிநபர்களையும் வர்த்தக நிறுவனங்களையும் வலுப்படுத்துவதன் மூலமே உண்மையான வர்த்தகநாமத் தலைமையை உருவாக்க முடியும் என ஹட்ச் நம்புகிறது. SLIM உடனான எமது கூட்டாண்மையின் ஊடாக, நாட்டின் வர்த்தகச் சூழலுக்கு பங்களித்து வரும் தொழில்முறை நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. இதன் மூலம், அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், மேலும் பல சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எம்மால் பங்களிக்க முடிகிறது.”































