Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
உலக வர்த்தக மையத்தில் புதிய அலுவலகத்துடன் இலங்கைக்கான தனது அர்ப்பணிப்பை Cambridge பலப்படுத்துகிறது

Oct 5, 2026 - 03:59 PM

உலக வர்த்தக மையத்தில் புதிய அலுவலகத்துடன் இலங்கைக்கான தனது அர்ப்பணிப்பை Cambridge பலப்படுத்துகிறது
Mobitel Inner 1278

Cambridge University Press & Assessment நிறுவனம், கொழும்பு உலக வர்த்தக மையத்தில் ஒரு புதிய அலுவலகத்தையும், Cambridge University Press & Assessment Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் மூலம் நேரடியாகப் பணியமர்த்தப்பட்ட உள்ளூர் அணியையும் கொண்டு, 2026 ஆகஸ்ட் 1 முதல் இலங்கையில் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. 

இந்த வளர்ச்சி, இலங்கைக்கான Cambridge-இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், உள்ளூர் திறன்களில் அதன் முதலீட்டையும் பிரதிபலிக்கிறது. இது நாடு முழுவதும் தாங்கள் ஆதரிக்கும் பாடசாலைகள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டாளர்கள் மற்றும் சமூகங்களுடன் அதன் அணிகளை நெருக்கமாகக் கொண்டுவருகிறது. 

தனது புதிய கொழும்புத் தளத்திலிருந்து, இலங்கை அணியானது நாட்டில் Cambridge University Press & Assessment நிறுவனத்தின் முழு அளவிலான பணிகளுக்கு ஆதரவளிக்கிறது. இதில் Cambridge International Education, Cambridge English, பதிப்பகம் மற்றும் கற்றல் வளங்கள், அத்துடன் விற்பனை, சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் செயல்பாடுகள் ஆகியவை அடங்கும். இலங்கையின் கல்வித் துறை முழுவதும் உள்ள முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்க, இவ்வணி அரசாங்கம் மற்றும் நிறுவனக் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. 

Cambridge University Press & Assessment நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான தலைமை அதிகாரி ஸஹாரா அன்சாரி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: 

“இலங்கையில் எமது பணி எப்போதுமே கல்விச் சமூகத்துடனான வலுவான உறவுகளின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அலுவலகமும், எங்களால் நேரடியாகப் பணியமர்த்தப்பட்ட உள்ளூர் அணியும், அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உள்ளூர் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், நாடு முழுவதும் நாங்கள் இணைந்து பணியாற்றும் பாடசாலைகள், கல்வியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு ஆதரவளிக்கவும் எங்களுக்கு இன்னும் வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. இது இலங்கையில் கல்வியின் எதிர்காலம் குறித்த எங்கள் நம்பிக்கையையும், நீண்ட காலத்திற்கு இங்கேயே நிலைத்திருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.” 

இலங்கையில் கல்வியின் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு, சர்வதேச பாடத்திட்டங்கள், திட்டங்கள் மற்றும் தகுதிகள், ஆங்கில மொழி கற்றல் மற்றும் மதிப்பீடு, கல்வி வளங்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கான தொழில்முறை மேம்பாடு ஆகியவற்றின் மூலம் பாடசாலைகளுக்கும் கற்பவர்களுக்கும் Cambridge ஆதரவளிக்கிறது. அதன் உள்ளூர் அணி, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், வேலையளிப்பவர்கள், அரசாங்கப் பங்குதாரர்கள் மற்றும் கல்விக் கூட்டாளர்களுடனும் இணைந்து செயல்படுகிறது. 

Cambridge பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக, Cambridge University Press & Assessment, கல்வி, மதிப்பீடு, ஆராய்ச்சி மற்றும் பதிப்பகம் ஆகியவற்றில் உள்ள நிபுணத்துவத்தை ஒன்றிணைக்கிறது. Cambridge International Education, 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடசாலைகளுடன் இணைந்து செயல்பட்டு, கற்பவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைத் தலைவர்களின் உலகளாவிய சமூகத்திற்கு ஆதரவளிக்கிறது. 

Cambridge University Press & Assessment நிறுவனத்தின் தெற்காசிய முகாமைத்துவப் பணிப்பாளர் அருண் ராஜாமணி கூறுகையில்: 

“தெற்காசியாவில் எங்களின் பணிகளில் இலங்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு வலுவான கல்விச் சமூகமும், பல ஆண்டுகளாக நாங்கள் வளர்த்தெடுத்த உறவுகளும் உள்ளன. எங்களின் உள்ளூர் இருப்பை வலுப்படுத்துவது, Cambridge நிறுவனத்தின் நிபுணத்துவத்தை உள்ளூர் சூழலைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வுடன் இணைத்து, இலங்கையில் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்ற எங்களுக்கு உதவுகிறது. இந்தப் பணியைத் தொடரவும், வரும் பல ஆண்டுகளுக்கு நாட்டில் கல்விக்கு ஆதரவளிக்கவும் நாங்கள் ஆவலுடன் உள்ளோம். 

கடந்த ஆண்டு, இலங்கையில் Cambridge நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. வள விற்பனையில் மிக அதிக அளவுகள், Sri Lankan Cambridge பாடசாலைகள் சமூகத்தில் பத்து புதிய பாடசாலைகள் இணைந்தமை மற்றும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50,000 Cambridge ஆங்கிலப் பரீட்சைகள் (Young Learners English - YLE உட்பட) நடத்தப்பட்டன. சர்வதேசக் கல்வி, ஆங்கிலம், பதிப்புத்துறை மற்றும் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடனான கூட்டாண்மைகள் ஆகியவற்றில் தனது பணிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக, Cambridge University Press & Assessment நிறுவனத்தின் இலங்கை அணிக்கு புதிய கொழும்பு அலுவலகம் தளமாகச் செயல்படும்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278