Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

Oct 2, 2026 - 04:54 PM

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!
Mobitel Inner 1278

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், தப்பிச் சென்று நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (2) யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்ட இவரை, கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
 

இதனையடுத்து கண்டி பல்லேகல சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவர், திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

 

தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடி பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
 

இந்தநிலையிலேயே, தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றுக்கு அருகில் நின்றிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278