Sep 30, 2026 - 11:46 AM

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை லொனக் தோட்டப் பகுதியில் பாரிய சிறுத்தை புலி ஒன்று நடமாடுவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுத்தை புலி லொனக் தோட்டப் பகுதியில் அமர்ந்திருக்கும் காணொளி ஒன்றை பிரதேச மக்கள் தமது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (29) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.































