Sep 30, 2026 - 01:14 PM

செலான் வங்கி அண்மையில், இலங்கையின் Cinnamon Life at City of Dreams மற்றும் Cinnamon Hotels & Resorts இன் முன்னணி வனவிலங்கு மற்றும் சாகச அனுபவ வழங்குநரான Cinnamon Nature Trails ஆகியவற்றுடன் இணைந்து, அட்டை வாடிக்கையாளர்களுக்கு ‘Jewels Beneath the Waves’ எனும் பிரத்தியேகமான, மனதை ஈர்க்கும் வனவிலங்கு மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கியது.
இது புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களான எரிக் கோ மற்றும் Cinnamon Nature Trails இன் துணைத் தலைவர், சித்ரால் ஜயதிலக்க ஆகியோரின் தலைமையில், Cinnamon Nature Trails இன் ‘Top Experts in the City’ தொடரின் சமீபத்திய நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வு, 2026 ஆகஸ்ட் 29 சனிக்கிழமை அன்று, இலங்கையின் Cinnamon Life at City of Dreams இன் 23ஆம் தளத்தில் அமைந்துள்ள Cumulus இல் நடைபெற்றது.
செலான் பிரத்தியேக வங்கிச் சேவை (Seylan Private Banking) வாடிக்கையாளர்களுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, புகைப்படக் கலையின் இரு தனித்துவமான கண்ணோட்டங்களை ஒரே மேடையில் கொண்டுவந்தது. சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற நீருக்கடிப் புகைப்படக் கலைஞரான எரிக் கோ, கடலுக்கடியில் தான் மேற்கொண்ட பயணங்களின் அனுபவங்களையும் நுண்ணறிவுகளையும் பகிர்ந்துகொண்டார். இது கடலலைகளுக்கு கீழே மறைந்திருக்கும், அரிதாகவே வெளிச்சத்திற்கு வரும் அந்த மர்மமான உலகை நெருக்கமாகக் காணும் அரிய வாய்ப்பை விருந்தினர்களுக்கு வழங்கியது.
உலகின் பல்வேறு பகுதிகளில் சித்ரால் ஜயதிலக்க மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட மறக்கமுடியாத வனவிலங்கு சந்திப்புகள் மற்றும் பயணங்களின் புகைப்படங்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றன. இதன் மூலம் நிகழ்வின் பயன்கள் மேலும் விரிவடைந்ததுடன், எதிர்வரும் இயற்கைச் சுற்றுலா அனுபவங்கள் தொடர்பான பிரத்தியேகமானதும் இலவசமானதுமான முன்னோட்டமும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.
நீருக்கடியில் காணப்படும் உலகின் மர்மங்கள், பன்முகத்தன்மை மற்றும் அழகை வெளிப்படுத்திய ‘Jewels Beneath the Waves’, வனவிலங்கு மற்றும் புகைப்படக் கலைத்துறையில் ஊக்கமளிக்கும் குரல்களை ஒன்றிணைக்கும் நீண்டகால தளத்தின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்தியது. இந்நிகழ்வு, இயற்கை உலகுடன் மக்களை இணைக்கும் அர்த்தமுள்ள அனுபவங்களை ஆராய்வதையும் கொண்டாடியது. அலைகளுக்கு அடியில் மறைந்திருக்கும் உலகின் வியக்கத்தக்க அம்சங்களை வெளிப்படுத்திய இந்நிகழ்வு, சிறந்த புகைப்படக் கலைப் படைப்புகளைப் பார்வையிடுவதுடன், வனவிலங்கு, உரையாடல் மற்றும் புகைப்படக் கதைசொல்லல் ஆகியவற்றை அணுகும் இரு அனுபவமிக்க புகைப்படக் கலைஞர்களின் தனித்துவமான அணுகுமுறைகளிலிருந்த ஊக்கம் பெறுவதற்கான வாய்ப்பையும் விருந்தினர்களுக்கு வழங்கியது.
நீருக்கடியிலான இயற்கைப் புகைப்படக் கலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு அனுபவத்தைக் கொண்ட எரிக் கோ, பல்வேறு கடலியல் சூழல்களை ஆழமாக ஆராய்ந்துள்ளதுடன், அவரது விரிவான புகைப்படத் தொகுப்புகள் சர்வதேச ரீதியில் பல சஞ்சிகைகள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் மற்றும் பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளன. எரிக், Royal Foundation இன் ஆதரவுடன் வெளியிடப்பட்ட ‘Terengganu Islands and State Parks’ என்ற நூலை எழுதியதுடன், முக்கிய சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்காகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர், மலேசியாவின் மிகப்பெரிய புகைப்படப் போட்டிகளில் ஒன்றான Sultan Mizan International Photography Awards (SMIPA) இன் தலைவராகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
‘அத்தியாவசிய தேவைகளுக்கான இன்றியமையாத அட்டை’ என்ற தனது உறுதிமொழிக்கு அமைவாக, செலான் அட்டைகள், தனது அட்டை வாடிக்கையாளர்களுக்காக பேணி வரும் உயர்தர பிரத்தியேகத்தன்மையுடன், நெருக்கமான பிணைப்பையும் இணைத்த அனுபவத்தை இந்நிகழ்வு வழங்கியது. ‘Discover a World Reserved Exclusively for You’ என்ற உறுதிமொழிக்கு ஏற்ப, செலான் பிரத்தியேக வங்கிச் சேவையின் Visa Infinite, Visa Signature மற்றும் World MasterCards அட்டை வாடிக்கையாளர்களுக்கு, மேலோட்டமான உலகத்திற்கு அப்பால், ஆழமாக ஆராயும் தனித்துவ அனுபவத்தை இந்நிகழ்வு வழங்கியது.
செலான் அட்டைகள், Cinnamon Hotels & Resorts மற்றும் அதன் இயற்கைச் சுற்றுலாப் பிரிவான Cinnamon Nature Trails உடன் இணைந்து, அட்டை வாடிக்கையாளர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவங்களை வழங்கும் தனது நோக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் வழமையான வங்கிச் சேவைகளுக்கு அப்பால் சென்று, சிறப்பாகத் திட்டமிடப்பட்ட அனுபவங்கள் வாயிலாகத் தனது முன்னணி வாடிக்கையாளர்களுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், வனவிலங்கு ஆர்வலர்கள் சந்தித்து, ஒன்றிணைந்து, எதிர்காலத்திற்கான உரையாடல்களை மேலும் வலுப்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள தளங்களை உருவாக்கும் வங்கியின் முயற்சியில் இக் கூட்டாண்மை புதிய அத்தியாயமாகவும் அமைகிறது.































