Sep 28, 2026 - 10:32 PM

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூல வரைவு வர்த்தமானியில் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளது.
நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளின் மூலம் கிரிக்கெட் விளையாட்டைக் கட்டுப்படுத்துதல், நிர்வகித்தல், ஒழுங்குபடுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டமூல வரை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.































