Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
விளையாட்டு
உலக கிண்ண அட்டவணை எப்போது வௌியாகிறது தெரியுமா?

Sep 28, 2026 - 03:44 PM

உலக கிண்ண அட்டவணை எப்போது வௌியாகிறது தெரியுமா?
Mobitel Inner 1278

ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆபிரிக்க நாடுகளான தென்ஆபிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. 

ஒக்டோபர் 4-ம் திகதி தொடங்கி, நவம்பர் 21-ம் திகதி வரை இந்த 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை எதிர்வரும் 1-ம் திகதி (அக்டோபர்) ஐசிசி வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்த உலக கிண்ணம்தான் தன்னுடைய கடைசி உலக கிண்ணத் தொடர் எனத் தெரிவித்துள்ளார். 

இதனால் இந்தத் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த உலக கிண்ணத்தில் 14 அணிகள் பங்கேற்கின்றன. விளையாட்டில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவும், அர்த்தமுள்ள மற்றும் சரியான போட்டியாகவும் இருக்கும் வகையில் ஐ.சி.சி. சில மாற்றங்களை செய்துள்ளது. 

அதன்படி ஐ.சி.சி. 50 ஓவர் உலக கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும் 14 அணிகளில், கடைசி 3 அணிகள் ரவுண்ட் 1-ல் விளையாடும். 

ரவுண்ட்-ராபின் சூப்பர் சீரிஸ் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 

இதில் முதல் இடம் பிடிக்கும் அணி, ரவுண்ட்-2க்கு முன்னேறும். 

ரவுண்ட்-2ல் 11 அணிகள் மற்றும் ரவுண்ட் 1-ல் முதல் இடம் பிடித்த அணி உட்பட 12 அணிகள் பலப்பரீட்சை நடத்தும். 

12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதுவும் ரவுண்ட்-ராபின் முறைதான். 

இரண்டு பிரிவுகளில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மற்ற 6 அணிகளில் எந்த அணி முதலிடத்தில் உள்ளதோ, அந்த அணி 7-வது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 

அதனடிப்படையில் அடுத்து ரவுண்ட் 3 என்று அழைக்கப்படும் சூப்பர் 7 சுற்று நடைபெறும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
08
கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

கொமர்ஷல் வங்கியானது தேசியளவிலான கடலோரம் மற்றும் நீர்நிலைகள் தூய்மைப்படுத்தல் திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழல் சார்ந்த தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்

Sep 28, 2026 - 04:51 PM


காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278