Sep 28, 2026 - 03:05 PM

INSEE, Sri Lanka’s leading cement manufacturer and market leader, hosted the INSEE Supplier Excellence Awards 2026 on 11 September at the Grandeeza Hotel, Negombo, under the theme “Partnership Beyond Boundaries.”இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரும் சந்தையில் முன்னணி நிறுவனமுமான INSEE, “Partnership Beyond Boundaries” என்ற தொனிப்பொருளின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்கான INSEE Supplier Excellence Awards நிகழ்வை செப்டெம்பர் 11 ஆம் திகதியன்று நீர்கொழும்பு, Grandeeza ஹோட்டலில் நடாத்தியது.
The event recognised and celebrated the company’s valued suppliers and business partners for their outstanding performance, contributions, and continued partnership with INSEE. இந்நிகழ்வு, தம்முடன் தொடர்ச்சியாக இணைந்து, செயற்பட்டு வரும் மதிப்புமிக்க வழங்குநர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளர்களின் சிறந்த செயல்திறன், பங்களிப்புகள் மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை கௌரவிக்கும் வகையில் INSEE ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது.
Bringing together suppliers, business partners, and INSEE employees, the event celebrated excellence, collaboration, and shared success. Awards were presented across the large, medium, and small supplier categories, covering production services, general administration services, logistics, transportation, and material handling. வழங்குநர்கள், வர்த்தகப் பங்காளர்கள் மற்றும் INSEE ஊழியர்கள் ஒன்றுகூடிய இந்நிகழ்வு, சிறந்த செயல்திறன், ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வெற்றிகளை கொண்டாடியது. உற்பத்திச் சேவைகள், பொது நிர்வாகச் சேவைகள், logistics, போக்குவரத்து மற்றும் பொருள் கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளில், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான வழங்குநர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
A total of 25 supplier awards and six employee awards were presented. Suppliers received Gold, Silver, and Bronze Performance Excellence Awards, while Special Excellence Awards recognised achievements in innovation, value creation, safety, and sustainability. INSEE employees were also recognised through the Best Supervisor and Best Custodian awards. மொத்தமாக 25 வழங்குநர் விருதுகளும் ஆறு ஊழியர் விருதுகளும் வழங்கப்பட்டன.
வழங்குநர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பிரிவுகளில் Performance Excellence விருதுகள் வழங்கப்பட்டதுடன், புத்தாக்கம், மதிப்பு உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறான தன்மை ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் Special Excellence விருதுகளும் வழங்கப்பட்டன. அதேவேளை, INSEE ஊழியர்களின் சிறப்பான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் Best Supervisor மற்றும் Best Custodian விருதுகளும் வழங்கப்பட்டன.
Eng. Thusith Gunawarnasuriya , CEO of INSEE Lanka, said:INSEE லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eng. துசித் குணவர்னசூரிய கருத்து தெரிவிக்கையில்,
“The Supplier Excellence Awards provide an important platform to recognise the partners who support and sustain our operations every day. Strong and trusted supplier relationships are fundamental to the reliability and quality we deliver to our customers and to building a more resilient and responsible construction industry in Sri Lanka. This year’s theme, ‘Partnership Beyond Boundaries,’ reflects the enduring value we create together, not only through products and services, but also through collaboration and a shared commitment to excellence.” “Supplier Excellence Awards, நாளாந்தம் எமது செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து அவற்றைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் எமது பங்காளர்களை கௌரவிப்பதற்கான முக்கிய தளமாக அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் நம்பகத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றிற்கும், இலங்கையின் நிர்மாணத் துறையை மேலும் வலுவானதும் பொறுப்புமிக்கதுமான துறையாகக் கட்டியெழுப்புவதற்கும், வலுவானதும் நம்பகமானதுமான வழங்குநர் உறவுகள் அடிப்படையாக அமைகின்றன. ‘Partnership Beyond Boundaries’ என்ற இவ்வாண்டின் தொனிப்பொருள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மாத்திரமன்றி, ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான விசேடத்துவதிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவும் நாம் ஒன்றிணைந்து உருவாக்கும் நீண்டகால மதிப்பை பிரதிபலிக்கிறது.” என்றார்.
The awards reaffirm INSEE’s commitment to building strong and reliable partnerships that enhance operational excellence and supply-chain resilience. For customers, these partnerships provide confidence that INSEE’s products and services are supported by trusted suppliers committed to quality, reliability, safety, and high operational standards. செயற்பாட்டுச் சிறப்பையும் விநியோகச் சங்கிலியின் வலுவையும் மேம்படுத்தும் வகையில், உறுதியானதும் நம்பகமானதுமான பங்காளித்துவங்களை உருவாக்குவதற்கான INSEE நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இவ்விருது வழங்கும் நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும் இப்பங்காளித்துவங்கள், வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில், தரம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் உயர் செயற்பாட்டுத் தரநிலைகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நம்பகமான வழங்குநர்களின் ஆதரவுடன் INSEEஇன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
Recognising suppliers for innovation, sustainability, and safe practices also reinforces the importance of responsible business across the wider construction ecosystem. Through continued collaboration, under the “Partnership Beyond Boundaries” theme, INSEE aims to deepen its supplier relationships, raise industry standards, and contribute to a more resilient and sustainable construction sector.புத்தாக்கம், நிலைபேறான தன்மை மற்றும் பாதுகாப்பான நடைமுறைகளில் விநியோகஸ்தர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதன் மூலம் பரந்துபட்ட நிர்மாணத் துறையில் பொறுப்புமிக்க வர்த்தக நடைமுறைகளின் முக்கியத்துவத்தையும் INSEE வலியுறுத்துகிறது. “Partnership Beyond Boundaries” என்ற தொனிப்பொருளின் கீழ் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் ஊடாக வழங்குநர்களுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தொழில்துறையின் தரநிலைகளை உயர்த்தவும், மேலும் வலுவானதும் நிலைபேறானதுமான நிர்மாணத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் INSEE எதிர்பார்த்துள்ளது.































