Sep 27, 2026 - 05:01 PM

பிரித்தானியாவின் வெல்ஃபோர்ட் (Whelford) கிராமத்துக்கு அருகில் உள்ள முக்கிய வான்படைத் தளப்பகுதியில் வெடிபொருள் சட்டத்தின் கீழ் குற்றங்களை புரிந்த சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளுசெஸ்டர்ஷையர் (Gloucestershire) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தின் வெடிபொருள் அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதோடு, அங்குள்ள பல வாகனங்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வான்படைத் தளத்திற்கு அருகில் உள்ள வெல்ஃபோர்ட் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்த முதன்மைச் சம்பவம் என்ன என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை
எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தலைமை தாங்கி நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தற்போது "கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக" உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ் சவேஜ் (Roz Savage) தெரிவித்துள்ளார். கைதானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை.
குறித்த வான்படைத் தளத்தில் அதிகளவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க வான்படையினர், அங்குள்ள தங்கள் வீரர்கள் "முழு விழிப்புடன்" இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.































