Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
Vietjet தனது சர்வதேச வலையமைப்பில் இலவச அதிவேக Wi-Fi வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக Starlink உடன் உடன்படிக்கை கைச்சாத்து

Sep 25, 2026 - 05:00 PM

Vietjet தனது சர்வதேச வலையமைப்பில் இலவச அதிவேக Wi-Fi வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக Starlink உடன் உடன்படிக்கை கைச்சாத்து
Mobitel Inner 1278

• கொழும்பு - Ho Chi Minh City வழித்தடம் அடங்கலாக, சகல Vietjet விமான சேவைகளில் பயணிகளுக்கு இலவச Wi-Fi வசதியை Vietjet வழங்கும் 

• முதற்கட்டமாக 120 Vietjet விமானங்களில் Starlink அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக விமான சேவையின் இதர சேவைகளுக்கும் விஸ்தரிக்கப்படும் 

வியட்நாமின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதியுமான தோ லம் (To Lam) அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, Vietjet நிறுவனம், அதன் குழும நிறுவனங்களான Galaxy Holdings மற்றும் Galaxy Telecom ஆகியவற்றுடன் இணைந்து, SpaceX நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படும் செய்மதி இணையச் சேவையான Starlink உடன் மூலோபாய ரீதியான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் Vietjet விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச, அதிவேக Wi-Fi வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வியட்நாமின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதியுமான தோ லம், இரு நாடுகளினதும் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வொப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இது வியட்நாம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பக் கூட்டாண்மையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்தது. 

முதற்கட்டமாக, 100 Airbus A321 மற்றும் Boeing 737 விமானங்கள் மற்றும் 20 Airbus A330 விமானங்கள் உட்பட Vietjet இன் 120 விமானங்களில் Starlink தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் புதிதாக இணையவுள்ள அனைத்து விமானங்களிலும் இந்த அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தவும் Vietjet திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வியட்நாமின் உள்நாட்டு மற்றும் சர்வதேச வான்வழி இணைப்புகளில் இணையச் சேவை விரிவாக்கப்படவுள்ளதுடன், கொழும்பிலிருந்து Ho Chi Minh City வரையிலான சேவை உட்பட அதன் அனைத்து சர்வதேச விமானச் சேவைகளிலும் இக்கூடுதல் வசதி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

உயர் வேகம், Low latency கொண்ட இணைப்புத் திறன் மற்றும் சமுத்திரங்கள், துருவப் பகுதிகள், தொலைதூரப் பிரதேசங்களை உள்ளடக்கிய சேவைப் பரப்பளவைக் கொண்டுள்ள Starlink தொழில்நுட்பம், பயணிகள் தங்களது பயணத்தின் முழு நேரத்திலும் தடையின்றிப் பணிகளை மேற்கொள்ளவும், தொடர்பில் இருக்கவும், பொழுதுபோக்கு அம்சங்களை இரசிக்கவும், இணையவழித் தகவல்களை அணுகவும் வழிவகுக்கும். விமானப் பயணத்தின் போது வழங்கப்படும் அதிவேக Wi-Fi வசதியை இனி ஒரு ஆடம்பரச் சேவையாக அன்றி, அன்றாட வான்வழிப் பயணத்திற்கு அத்தியாவசியமான, அனைவரும் எளிதில் பெறக்கூடிய ஒரு டிஜிட்டல் சேவையாக மாற்றுவதையே Vietjet நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Vietjet தலைமை அதிகாரி கலாநிதி. நுயென் தி புவோங் தாப் (Dr. Nguyen Thi Phuong Thao) கருத்துத் தெரிவிக்கையில், “Starlink தொழில்நுட்பத்தின் மூலம், வான்வழிப் பயண நேரமானது இனி Offline நேரமாகக் கருதப்பட வேண்டியதில்லை. Vietjet பயணிகள் தங்களது பயணத்தின் முழுவதும் பணி நிமித்தமாக, பொழுதுபோக்கிற்காக அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக தடையின்றி இணையத்தைப் பயன்படுத்த முடியும். இது புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் Vietjet கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பையும், முன்னணித் தொழில்நுட்பங்களை அதிகமான மக்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்ப்பதற்கான எமது இலக்கையும் பிரதிபலிக்கிறது.” என்றார். 

SpaceX இன் சர்வதேச வணிக மற்றும் அரச விவகாரங்களுக்கான சிரேஷ்ட உப தலைவர் டிம் ஹியுஸ் கருத்துத் தெரிவிக்கையில், “வியட்நாமில் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேகமான மற்றும் நம்பகமான இணையச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், Vietjet இல் அறிமுகப்படுத்தப்படும் Starlink தொழில் நுட்பம் அமையும். Vietjet நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இத்தகைய உயர்தர இணைய இணைப்பு அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். இது ஒவ்வொரு வான்வழிப் பயணத்தையும் சிறப்பானதாகவும், சுமுகமானதாகவும், அளப்பரிய மகிழ்வளிப்பதாகவும் மாற்றும்.” என்றார். 

Starlink உடனான இந்த ஒப்பந்தமானது, Vietjet மற்றும் SpaceX நிறுவனங்களுக்கு இடையிலான நீண்டகாலத் தொழில்நுட்ப உறவின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. தனது நவீன விமானக் கட்டமைப்பு, தரவு முகாமைத்துவம், AI மற்றும் உயர் திறமைமிக்க மனிதவளக் கட்டமைப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முதலீடுகளுடன் இணைந்து, Vietjet ஒரு டிஜிட்டல் வான்வழிச் சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது. இத்தளமானது, இலங்கைக்கான மற்றும் இலங்கையிலிருந்தான விமானச் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் உட்பட பல இலட்சக்கணக்கான பயணிகளைத் தங்களது பயணங்களின் போது உலகத்துடன் தடையின்றி இணைப்பில் வைத்திருக்க உதவுகிறது. 

Vietjet பற்றி: 

புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது. 

Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com 

Starlink பற்றி: 

Low-Earth orbit இல் இயங்கும் உலகின் மிகவும் மேம்பட்ட செயற்கைக்கோள் கூட்டமைப்பான Starlink, தடையற்ற Streaming, இணையவழி விளையாட்டுகள், காணொளி அழைப்புகள் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்குத் தேவையான நம்பகமான Broadband இணையச் சேவையை வழங்குகிறது. SpaceX நிறுவனத்தால் விண்வெளிப் பொறியியல் தளத்தில் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படும் Starlink, விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை ஏவும் சேவைகளில் உலகளவில் முன்னணி வகிப்பதுடன், மீளப் பயன்படுத்தக்கூடிய சுற்றுப்பாதை ரொக்கெட்டைக் கொண்டுள்ள ஒரே நிறுவனமாகவும் திகழ்கிறது. இதன் மூலம் விண்வெளி ஓடங்கள் மற்றும் சுற்றுப்பாதைச் செயல்பாடுகளில் SpaceX நிறுவனம் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளது. 

மேலும் அறிந்து கொள்ள www.starlink.com பார்க்கவும் மற்றும் X இல் @Starlink ஐ follow செய்யவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278