Sep 25, 2026 - 04:50 PM

கடந்த 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவத் திருவிழாவின் 15 ஆம் நாள் தேர்த் திருவிழா இன்று (25) ஆயிரக் கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு பிரம்ம ஶ்ரீ சுதர்ஸன கணேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இன்று காலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகி ஶ்ரீ வல்லிபுரத்தாழ்வார் சக்கரம் தேரேரினார்.
பிள்ளையார், முருகப்பெருமான், சக்கரத்தாழ்வார் என முத்தேர் பவனி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருள் பாலித்தனர்.
நாளை (26) சமுத்திரத் தீர்த்தம் மாலை 04.00மணிக்கும் நாளை மறுதினம் (27) கேணித் தீர்த்தம், கொடியிறக்கத்துடன் வருடாந்த மகோற்சவம் நிறைவுபெறுவுள்ளது.































