Sep 23, 2026 - 07:01 PM

யாழ்ப்பாணம், அரியாலை பூங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது பாடசாலை மாணவியான மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிந்ததும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வீட்டை நோக்கி அழைத்துச் சென்றபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
பூங்கன்குளம் ரயில் கடவையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மகள் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.































