Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
475 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான சட்டவிரோதமாக சொத்துக்கள் முடக்கம்

Sep 23, 2026 - 07:00 AM

475 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான சட்டவிரோதமாக சொத்துக்கள் முடக்கம்
Mobitel Inner 1278

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 475 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய பல சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பதவிய பராக்கிரமபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களை ஈட்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டை பொலிஸ் மா அதிபர், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்கள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

அவற்றில், அவரது மனைவியின் பெயரில் புதிய நகர், பதவிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 275 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 15 பேர்ச்சஸ் காணியும் அதில் கட்டப்பட்டுள்ள இருமாடி கட்டிடமும் அடங்குகின்றன.

 

மேலும், அனுராதபுரம் விஜயபுர பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 120 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 15 பேர்ச்சஸ் காணியும் அதில் கட்டப்பட்டுள்ள வீடும், சுமார் 65 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வேன் ஒன்றும் மற்றும் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சிறிய லொறி ஒன்றும் விசாரணைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தமை தொடர்பில் 47 வயதான சந்தேகநபரும் அவரது 45 வயதான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உட்பட சுமார் 475 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சொத்துக்களை 2026 செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278