Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ஜனசக்தி லைஃப், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் முதல் ஐந்து ஆயுள் காப்புறுதி வர்த்தகநாமங்களில் இடம்பெறுகிறது

Sep 22, 2026 - 01:21 PM

ஜனசக்தி லைஃப், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் முதல் ஐந்து ஆயுள் காப்புறுதி வர்த்தகநாமங்களில் இடம்பெறுகிறது
Mobitel Inner 1278

LMD Readers Choice 2026 தரவரிசையில் 7 ஆம் இடத்திலிருந்து 5 ஆம் இடத்துக்கு முன்னேறி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தகநாமமும், காப்புறுதித் துறையின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றுமான ஜனசக்தி லைஃப், LMD Readers Choice Most Loved Brands 2026 தரவரிசையில் 7 ஆம் இடத்திலிருந்து 5 ஆம் இடத்துக்கு முன்னேறி, இலங்கையின் மிகவும் விரும்பப்படும் முதல் ஐந்து ஆயுள் காப்புறுதி வர்த்தகநாமங்களில் இடம்பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம், வாடிக்கையாளர்களிடையே ஜனசக்தி லைஃப் மீதான நம்பிக்கையும் விருப்பமும் தொடர்ந்து வலுப்பெற்று வருவதை வெளிப்படுத்துகிறது. 

2025 ஆம் ஆண்டில் 7 ஆம் இடத்தில் இருந்த ஜனசக்தி லைஃப், 2026 ஆம் ஆண்டில் 5 ஆம் இடத்தைப் பெற்றுள்ளமை வாடிக்கையாளர்களுடனான வலுவான உறவு, அதிகரித்து வரும் வர்த்தகநாம மதிப்பு மற்றும் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க நுகர்வோர் வர்த்தகநாம தரவரிசைகளின் ஒன்றில் தொடர்ச்சியாகப் பெற்றுவரும் நம்பிக்கை ஆகியவற்றிற்கான சான்றாகும். 

LMD Most Loved Brands தரவரிசை, இலங்கையில் நுகர்வோர் மனப்பாங்கை பிரதிபலிக்கும் நம்பகமான அளவுகோலாகக் கருதப்படுகின்றது. எனவே இந்த அங்கீகாரம், ஜனசக்தி லைஃப் தனது வாடிக்கையாளர்களுக்காக நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும் அர்ப்பணிப்பிற்கு கிடைத்த அர்த்தமுள்ள பாராட்டாகும். ஆண்டு தோறும் LMD, Most Loved Brands ஆய்வின் மூலம் வாசகர்களிடமிருந்து பெறும் விருப்பங்களின் அடிப்படையில் இத்தரவரிசை தயாரிக்கப்படுகிறது. 

இச் சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே, இது வெறும் தரவரிசை முன்னேற்றம் மட்டுமல்ல; கடந்த காலங்களில் நாங்கள் ஈட்டித், தொடர்ந்து பாதுகாத்து வரும் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். ஆயுள் காப்புறுதித்துறையில் மிகவும் விரும்பப்படும் முதல் ஐந்து வர்த்தகநாமங்களில் ஒன்றாக உயர்ந்திருப்பது, எங்கள் நோக்கத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறை மக்களிடம் சிறப்பாகச் சென்றடைந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது. ஜனசக்தி லைஃப்பில், ஒவ்வொரு காப்புறுதித் திட்டமும், ஒவ்வொரு கோரிக்கைத் தீர்வும், ஒவ்வொரு வாடிக்கையாளர் தொடர்பும், மிகவும் தேவையான தருணங்களில் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருப்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இந்த அங்கீகாரம், இக் கொள்கையை தினமும் வலுப்படுத்தி வரும் எங்கள் அர்ப்பணிப்புமிக்க பணியாளர்களுக்கும், எங்கள் மீது நம்பிக்கையை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உரியது. இதை ஒரு நிறைவான இலக்காகக் கருதாமல், சேவை, புத்தாக்கம் மற்றும் இலங்கைக் குடும்பங்களுக்கான நிதிப் பாதுகாப்பில் இன்னும் உயர் தரத்தை எட்டுவதற்கான புதிய ஊக்கமாகவே நாங்கள் பார்க்கிறோம். என்றார். 

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பிரதம வணிக அதிகாரியான நாமலி A. சில்வா கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் வணிகத்தின் அடித்தளமே நம்பிக்கையாகும். நாட்டின் மிகவும் விரும்பப்படும் முதல் ஐந்து ஆயுள் காப்புறுதி வர்த்தகநாமங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு மனநிம்மதியை வழங்கும் தீர்வுகளை தொடர்ந்து உருவாக்கும் எங்கள் அக்கறையும் மனிதநேய அணுகுமுறையும் இந்த அங்கீகாரத்தின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. என்றார். 

இந்த வலுவான வர்த்தகநாம வளர்ச்சிக்கு, நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை, பொறுப்புமிக்க நிர்வாகம், தொடர்ச்சியான சேவைத்தரம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கங்கள் ஆகியவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. Lanka Rating Agency வழங்கியுள்ள (A-) நிதி வலிமைத் தரச்சான்றையும், 

நிலையான கண்ணோட்ட மதிப்பீட்டையும் ஜனசக்தி லைஃப் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இது நிறுவனத்தின் உறுதிப்பாடு, விவேகமான நிர்வாகம் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது. இந்த வலுவான அடித்தளத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், CA Sri Lanka TAGS Awards 2025 விருதுகளில், காப்புறுதி – குழுமப் பிரிவில் (மொத்த எழுதப்பட்ட பிரீமியம் ரூ.10 பில்லியன் வரை) தங்க விருதை வென்றது. இவ் விருது ஊடாக வெளிப்படைத்தன்மை, அறிக்கையிடல் தரம் மற்றும் நிறுவன ஆளுகை நடைமுறைகளில் நிறுவனம் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சான்றுகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும் வெளிப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், ஜனசக்தி லைஃப் தனது காப்புறுதிதாரர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.3.8 பில்லியன் பெறுமதியான இழப்பீட்டுத் தொகையை வழங்கி, முக்கியமான வாழ்க்கைத் தருணங்களில் குடும்பங்களுடன் உறுதுணையாக இருந்துள்ளது. 

நிதிப்பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் மாறிவரும் தேவைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, COVID Cover, AIDS Cover, Military Cover போன்ற முன்னோடியான காப்புறுதித் தீர்வுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஜனசக்தி லைஃப், தொழில்துறையின் புத்தாக்க வளர்ச்சிக்கும் தொடர்ந்து பங்களித்து வருகிறது. 

இந்த அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், பாதுகாப்பான நிதித்தீர்வுகளை அதிகமானோருக்கு கொண்டு சேர்த்தல் மற்றும் இலங்கைக் குடும்பங்களுக்கு நீண்டகால நிதிப்பாதுகாப்பை வழங்குதல் ஆகியவற்றில் ஜனசக்தி லைஃப் தொடர்ந்து கவனம் செலுத்தும். அதன் “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” என்ற நோக்கத்திற்கு அமைய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் கனவுகளுக்கு வலு சேர்க்கவும் நிறுவனம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும். 

ஜனசக்தி லைஃப் பற்றி 

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. 

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி - https://www.janashakthi.com/

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

Mobitel 1278