Sep 22, 2026 - 12:33 PM

இலங்கை முழுவதும் மக்களை வலுப்படுத்துவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குப் பங்களிப்பதிலும் ஏறக்குறைய மூன்று தசாப்த கால சாதனைகளைக் கொண்டாடும் வகையில், SDB வங்கி அண்மையில் தனது 29 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
“ஒரே நிலையான எதிர்காலத்திற்காக பல்லாயிரக்கணக்கான கரங்களை வலுப்படுத்தும் 29 ஆண்டுகள் என்ற கருப்பொருளின் கீழ் இந்த மைல்கல் நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிதி வாய்ப்புகளை உருவாக்குதல், வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான முன்னேற்றத்தை ஆதரித்தல் ஆகிய வங்கி மேற்கொண்ட முயற்சிகளுக்கும் அதன் பயணத்திற்கும் பங்களித்த தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், தொழில்முனைவோர்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், ஊழியர்கள் மற்றும் சமூகங்கள் ஆகியோரை இந்நிகழ்வு கௌரவித்தது.
இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்துச் சிந்தனை மற்றும் நன்றியுணர்வுடன் கூடிய சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளுடன் இந்த ஆண்டு நிறைவு நிகழ்வுகள் தொடங்கின. வங்கிக்குத் தங்கள் நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை வழங்கியதற்காக, 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த ஊழியர்களை SDB வங்கி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவின் மூலம் கௌரவித்தது. இவ்விழாவில் அவர்களுக்குத் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டன.
நிறுவனத்தைத் தாண்டி கொண்டாட்டங்களை விரிவுபடுத்தும் வகையில், SDB வங்கியின் நலன்புரிச் சங்கம் செப்டெம்பர் மாதத்தில் இரத்த தான முகாம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒரு முக்கியமான தேசியத் தேவைக்குத் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு ஊழியர்களும் பிற பங்கேற்பாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இலங்கை முழுவதும் உள்ள கிளைகளிலும் இச்சிறப்பு நிகழ்வு கொண்டாடப்பட்டது. கிளை அளவிலான இக்கொண்டாட்டங்கள், ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தன. தங்கள் ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக நிலைபேற்றியலுக்கான முன்னெடுப்புகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, உள்ளூர் சமூகங்களிடையே நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கவும், சுற்றுச்சூழல் மீது பொறுப்புணர்வு கொண்ட வருமான வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் பதுளையில் தேனீ வளர்ப்பு சார்ந்த தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை SDB வங்கி தொடங்கியுள்ளது.
இந்த முக்கிய மைல்கல் சாதனை குறித்து கருத்து தெரிவித்த SDB வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஜ் அக்மீமன, “எமது 29 வது ஆண்டுவிழா என்பது எங்களுடன் இணைந்து இந்தப் பயணத்தை கட்டமைத்த மக்களுக்கான ஒரு கொண்டாட்டமாகும். எதிர்காலத்தை நோக்கிய எங்கள் பயணத்தில், மக்களை வலுவூட்டும், சமூகங்களை வலிமைப்படுத்தும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான இலங்கையை உருவாக்கப் பங்களிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதிலேயே எங்கள் கவனம் உள்ளது, என்று குறிப்பிட்டார்.
SDB வங்கி தனது 29 வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், தொழில்முனைவோர், கூட்டாளர்கள் மற்றும் சமூகங்களின் கூட்டு முயற்சியின் மூலம் அர்த்தமுள்ள பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும், நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
SDB வங்கி தொடர்பான விபரங்கள்
ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கும் ஏற்ப, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மற்றும் முழுமையான சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் SDB வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட ஒரு உரிமம் பெற்ற சிறப்பு வங்கியாகும். இது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிரற்படுத்தலில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings நிறுவனத்திடமிருந்து BB+(lka) தரவரிசையையும் பெற்றுள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள 93 கிளைகளின் வலையமைப்பு மூலம், தனிநபர் வங்கிச் சேவை, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறை சேவை, கூட்டுறவு மற்றும் வணிக வங்கிச் சேவை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கி விரிவான நிதிச் சேவைகளை வழங்குகிறது. நிலையான நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில் உறுதியான கவனம் செலுத்தும் SDB வங்கியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளில், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த கோட்பாடுகள் ஆழமாகப் பதிந்துள்ளன. இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்லும் நோக்கில், பெண்களுக்கு வலுவூட்டுதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களின் நிலையான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் இவ்வங்கி குறிப்பாக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.





























