Sep 21, 2026 - 12:17 PM

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் A.M. ஷாஜஹான் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, நேற்று (20) கொழும்பில் சிறப்பு இரவு விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான மக்கள் தொடர்புகள், தமிழ் பேசும் மக்களின் நலன், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இவ்வாறான சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அமைச்சர் A.M. ஷாஜஹான் இலங்கை விஜயத்தின் போது, இலங்கையின் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சிறுபான்மை சமூகங்களின் நலன், கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் மேற் கொள்ளப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நடைபெற்ற இரவு விருந்துபசார நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான உறவுகள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் நலன் தொடர்பான தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





























