Sep 21, 2026 - 11:54 AM

வத்தளையில் புதிய பருப்பு மற்றும் உளுந்து பதப்படுத்தும் தொழிற்சாலை – தரம், உற்பத்தித் திறன் மற்றும் உள்ளூர் விவசாயத்திற்கு புதிய முன்னுரிமை
இலங்கையின் உணவுப் பொருட்கள் வர்த்தகத் துறையில் 45 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ள Omega Traders, தனது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முக்கியமான முன்னேற்றத்தை மேற்கொண்டு, வத்தளை, 258 Canal Road இல் நவீன பருப்பு மற்றும் உளுந்து பதப்படுத்தும் தொழிற்சாலையை நிறுவியுள்ளது.
Omega Traders நிறுவனத்தின் புதிய, பருப்பு மற்றும் உளுந்து பதப்படுத்தும் தொழிற்சாலை 2026 செப்டம்பர் 18ஆம் திகதி வத்தளையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அரச நிறுவனங்கள், வங்கித் துறை, விவசாயத் துறை, வாடிக்கையாளர்கள், வர்த்தகப் பங்காளர்கள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேதகு Matthew Duckworth பிரதம அதிதியாகவும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) பணிப்பாளர் நாயகம்/பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் (திருமதி) Siddhika G. Senaratne கௌரவ அதிதியாகவும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1981ஆம் ஆண்டு ஒரு சிறிய வர்த்தக நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட Omega Traders, கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக படிப்படியாக வளர்ச்சியடைந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி, பதப்படுத்தல் மற்றும் விநியோகத்தில் நம்பகமான நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. தரம், ஒரே மாதிரியான தரநிலை, நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களுடனும் வர்த்தகப் பங்காளர்களுடனும் நீண்டகால உறவுகளைப் பேணுதல் ஆகியவை நிறுவனத்தின் பயணத்தின் அடிப்படை மதிப்புகளாக இருந்து வருகின்றன.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை முழுவதும் மைசூர் எனப்படும் பருப்பை விநியோகித்து வரும் Omega Traders, மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட விரிவான வலையமைப்பின் ஊடாக நாடு முழுவதும் உள்ள நுகர்வோரைச் சென்றடைந்துள்ளது. இந்தப் புதிய தொழிற்சாலை, நிறுவனத்தின் பதப்படுத்தும் திறனை மேம்படுத்துவதுடன், அதிக அளவில் உற்பத்தி செய்வதை மட்டுமன்றி, இன்னும் சிறந்த தரமான பருப்பை வழங்குவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய சிவப்பு பருப்பு பதப்படுத்தும் பிரிவானது, எட்டு மணி நேர உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 150 மெட்ரிக் தொன் பதப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. நவீன தலைமுறை உயர்தர சுத்திகரிப்பு, பதப்படுத்தல், தரம்பிரித்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தொழிற்சாலையில் நிறுவப்பட்டுள்ளன.
குறிப்பாக, மேம்பட்ட நிறத் தரம்பிரித்தல் தொழில்நுட்பம் (colour sorting technology) மூலம் தரமற்ற தானியங்கள் மற்றும் வெளிப்பொருட்களை துல்லியமாக அடையாளம் கண்டு அகற்ற முடியும். மேலும், மூலப்பொருட்கள் தொழிற்சாலைக்கு வருகை தரும் நிலையிலிருந்து இறுதி தயாரிப்பு வரை பல்வேறு கட்டங்களில் தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தொழிற்சாலைக்குள் தனியான தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகூடமும் நிறுவப்பட்டுள்ளது.
புதிய தொழிற்சாலை Omega Traders நிறுவனத்தின் மூன்று முக்கிய மைசூர் பருப்பு வர்த்தகநாமங்களான Rainbow Jumbo Dhal, Komas Dhal மற்றும் Rozanna Dhal ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் தரக் கட்டுப்பாட்டையும் மேலும் வலுப்படுத்தும். வெவ்வேறு நுகர்வோர் பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த மூன்று வர்த்தகநாமங்களிலும் தரம் பொதுவான அடிப்படையாகத் தொடரும்.
இதனிடையே, புதிய திட்டத்தின் மற்றுமொரு முக்கிய அம்சமாக உளுந்து பருப்பு பதப்படுத்தும் பிரிவு அமைந்துள்ளது. இதன் மூலம் இலங்கை விவசாயிகளிடமிருந்து உள்நாட்டில் விளைவிக்கப்படும் கறுப்பு உளுந்தை கொள்வனவு செய்து, அதனை இலங்கையிலேயே பதப்படுத்தி Orid Dhal ஆக சந்தைக்கு வழங்க Omega Traders திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சி உள்ளூர் விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், உள்நாட்டு விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், நாட்டிற்குள் மேலதிக பெறுமதி உருவாக்குவதற்கும் பங்களிக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உள்ளூர் விவசாயிகள், உள்நாட்டு உணவுப் பதப்படுத்தல் மற்றும் இலங்கை நுகர்வோர் ஆகியோரை இணைக்கும் வலுவான உள்ளூர் பெறுமதி சங்கிலியை உருவாக்குவது நிறுவனத்தின் நோக்கமாகும்.
45 ஆண்டுகால அனுபவத்தை அடுத்த கட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் Omega Traders, அதிக உற்பத்தித் திறனுடன் மட்டுமல்லாது, உயர்ந்த தரநிலை, தொடர்ச்சியான தரக் கட்டுப்பாடு மற்றும் உள்ளூர் பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குகிறது.





























