Sep 16, 2026 - 06:10 PM

டுபாயில் தலைமறைவாகியுள்ள 'அங்கொட பிரியங்கர' எனும் திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய, நாகஹமுல்ல பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனையின் போதே, சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார்.
கைதான சந்தேகநபரிடம் இருந்து 716 கிராம் ஹெரோயின், 255 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் ஒரு தோட்டாவுடன் கூடிய ரஷ்ய தயாரிப்பிலான மைக்ரோ ரகத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.





























