Sep 16, 2026 - 05:42 PM

காமன் மேன் நிகழ்ச்சியில் தனக்கு நாற்காலி கிடைக்காமல் சங்கடத்தில் இருந்த முனியம்மாவுக்கு மாயா டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினாலும் அனுப்பினார். காமன் மேன் நிகழ்ச்சியில் கலக்கு கலக்குன்னு கலக்கி விட்டு இப்போ பிக் பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டி வருகிறார் முனியம்மா.
தாமரைச் செல்வி போல இவரும் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் நிலைப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் வாரத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இருந்து அதிகளவிலான வரவேற்பும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து அதிகப்படியான எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருகிறார் முனியம்மா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு நாள் வந்து விட்டு வெளியேறினாலும், பிரசாந்த் ரங்கசாமி போல ஆன் ஸ்டேஜில் அவமானப்பட்டு வெளியேறினாலும் பிக் பாஸ் பிரபலம் என்கிற அடைமொழி எளிதாக அவர்களிடம் ஒட்டிக் கொள்ளும். சாதாரணமாக வடை சுட்டு விற்று வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமையல் செய்வதில் அதிக ஆர்வமுள்ள முனியம்மா பிக் பாஸ் காமன் மேன் போட்டியில் கலந்துக் கொண்டு அங்கிருந்து செலக்ட் ஆகி பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர் ஆகியுள்ளார். இவரது உண்மையான பெயர் பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 10 தொடங்கி பெரிதாக விறுவிறுப்புடன் செல்லவில்லை என்றாலும், கடந்த வாரம் விஜய் சேதுபதி பேசிய பேச்சால், பிக் பாஸ் பற்றிய பேச்சு தமிழ்நாடு முழுக்க எதிரொலித்து வருகிறது.
மதுரையை சேர்ந்த முனியம்மா வட்டார பேச்சில் விஜய் சேதுபதியையே கண்ணில் விரல் விட்டு ஆட்டியதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என இப்போதே கொண்டாட தொடங்கி விட்டனர். ஓவியா, பிரதீப் ஆண்டனியை ஓரங்கட்டி வெளியே அனுப்பியது போல விஜய் டிவி முனியம்மாவை வெளியே அனுப்பி விடுமா? அல்லது இறுதி வரை போட்டியில் விளையாடி வெற்றி வாகை சூடுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.





























