Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z Fold8 கையடக்கத் தொலைபேசிகளுக்கான விற்பனை இலங்கையில் ஆரம்பம்

Sep 16, 2026 - 04:27 PM

விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z Fold8 கையடக்கத் தொலைபேசிகளுக்கான விற்பனை இலங்கையில் ஆரம்பம்
Mobitel Inner 1278

Samsung Galaxy Z Fold8 Ultra 5G மற்றும் Galaxy Z Fold8 5G ஆகிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய Samsung Sri Lanka நிறுவனம், அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துச் சலுகைகளையும் மேலும் விரிவுபடுத்தியவாறு அத்தொடரை சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பதிவு காலத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் Galaxy Z Fold8 மாதிரி பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, அதிகளவிலான முன்பதிவுகளும் பதிவாகின. இந்த அபரிமிதமான வரவேற்பானது மடிப்பு திரை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. 

அத்துடன், சாதாரண ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பயன்படுத்துவதைப் போன்ற எளிதான தன்மையைத் தக்கவைத்துக் கொண்டு, ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை முன்னெடுக்கக்கூடிய பரந்த திரை கொண்ட ஸ்மார்ட்போனின் தேவையை இப்புதிய தயாரிப்புத் தொடர் நிறைவு செய்கிறது. 

முன்பதிவு காலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, Samsung Sri Lanka நிறுவனம் இப்புதிய Galaxy Z Fold8 Ultra 5G மற்றும் Galaxy Z Fold8 5G தொடரை நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து Samsung விற்பனை நிலையங்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த அதிக தேவையை கருத்திற் கொண்டு, முன்பதிவு காலத்தில் வழங்கப்பட்ட பல விசேட சலுகைகளை பொது வாடிக்கையாளர்களுக்கும் மேலும் நீட்டித்து வழங்க Samsung நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த Samsung ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சங்ஹ்வா சோங், “முன்பதிவு காலத்தில் Galaxy Z Fold8 தொடருக்கு வாடிக்கையாளரிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது. மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுபவத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து இவ்வளவு பலத்த வரவேற்பைக் கண்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அதிக தேவைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்கு எங்களது புதிய Foldable Galaxy ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையிலும் எங்களது சிறப்புச் சலுகைகளை மேலும் நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.” எனக் குறிப்பிட்டார். 

இதன்படி, அனைத்து வாடிக்கையாளருக்கும் ரூ. 87,000 விசேட தள்ளுபடி உரித்தாகின்றது. Break-Free screen replacement சேவையின் ஊடாக 2 ஆண்டுகள் வரை இரண்டு முறை ரூ. 621,625 பெறுமதியான உட்புறத் திரையையும் (inner screen) மற்றும் ரூ. 76,267 பெறுமதியான வெளிப்புறக் கவசத் திரையையும் (cover screen) இலவசமாக மாற்றிக்கொள்ளும் வசதியும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இதற்கு மேலதிகமாக, டயலொக் மற்றும் மொபிடெல் இணைப்புகள் ஊடாக 2026 செப்டம்பர் 30 ஆம் திகதி வரை பயன்படுத்தக்கூடிய 1TB இலவச Data Package வழங்கப்படுவதுடன், ரூ. 37,470 பெறுமதியான Google AI Pro சேவை 6 மாத காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் Gemini AI அம்சங்கள் மற்றும் 5TB cloud storage வசதிகளைப் பயனர்கள் அனுபவிக்க முடியும். 

Samsung நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக நெகிழ்வுத்தன்மை கொண்ட இலகு தவணை செலுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தெரிவுசெய்யப்பட்ட வங்கிகள் மற்றும் செலுத்தும் திட்டங்களின் அடிப்படையில் 3 முதல் 24 மாதங்கள் வரையிலான மாதாந்த தவணை செலுத்தும் வசதிகள் அடங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது நிதி வசதிக்கு ஏற்ப மிகவும் இலகுவாக Galaxy Z Fold 8 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

24 மாத Easy Pay செலுத்தும் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் Galaxy Z Fold 8 5G (12GB + 256GB) ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை மாதத்திற்கு ரூ. 20,161 தவணைக் கட்டணத்திலும், Galaxy Z Fold8 Ultra 5G (12GB + 256GB) ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை மாதத்திற்கு ரூ. 22,456 தவணைக் கட்டணத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். 

நாடு முழுவதும் அமைந்துள்ள John Keells Office Automation (JKOA), சாப்ட்லொஜிக், சிங்கர், சிங்ககிரி, டயலொக், மொபிடெல் மற்றும் அனைத்து Samsung அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மூலமாகவும், வாடிக்கையாளர்கள் Galaxy Z Fold8 Ultra 5G மற்றும் Galaxy Z Fold8 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை தற்போது விசேட சலுகைகளுடன் கொள்வனவு செய்யலாம். கையிருப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், முன்பதிவின் போது வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்ள இன்றே உங்களது ஆர்டரை முன்பதிவு செய்யுங்கள். 

மேலதிக விபரங்கள் அல்லது தயாரிப்புத் தகவல்களைப் பெற 011 7267864 என்ற இலக்கத்தின் ஊடாக Samsung வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொள்ளவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278