Sep 16, 2026 - 04:22 PM

செலிங்கோ லைஃப் நிறுவனமானது இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் விற்பனைச் சிறப்பின் முன்னணி சக்தியாகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆயுள் காப்புறுதி ஆலோசகர்கள் மன்றம் (National Forum for Life Insurance Advisors - NAFLIA) விருது விழாவில் சிறப்பான 12 விருதுகளை வென்றுள்ளது, இதில் நிறுவனத்தின் தொழில் தகைமையாளர்கள் நாட்டிலேயே சிறந்தவர்களாக அங்கீகரிக்கப்படும் வகையில் வழங்கப்பட்ட ஐந்து தேசிய விருதுகளும் அடங்குகின்றன.
இந்த விருது விழாவில் செலிங்கோ லைஃப்பின் விற்பனைத் உத்தியோத்தர்கள் பாரிய நிறுவனம் மற்றும் தேசிய ரீதியில் ஆகிய இரு மட்டங்களிலும் சிறந்து விளங்கினர், ஆலோசகர், மேற்பார்வையாளர் மற்றும் கிளை முகாமையாளர் ஆகிய பிரிவுகளில் இரு மட்டங்களிலும் நிறுவனம் உயரிய விருதுகளைப் பெற்றதுடன், விரைவு தொடக்க ஆலோசகர் பிரிவில் பாரிய நிறுவன மட்டத்தில் இரு வெற்றியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆலோசகர் பிரிவில், திரு. ஏ.பி.எஸ் விஜயகுமார் தேசிய மற்றும் பெரிய நிறுவன மட்டங்களில் முதல் இடத்தைப் பெற்றார், அதேவேளை திரு. ஏ.ஐ.பி மஞ்சுள இரு மட்டங்களிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றார், இதன் மூலம் இந்தப் பிரிவில் அங்கீகாரத்தின் இரு நிலைகளிலும் செலிங்கோ லைஃப் நான்கு விருதுகளைப் பெற்றது. மேற்பார்வையாளர் பிரிவிலும் நிறுவனத்தின் வலிமை சமமாக வெளிப்படுத்தப்பட்டதுடன், இதில் திரு. ஆர்.பி எதிரிசிங்க முதல் இடத்தைப் பெற்றதுடன், இந்தப் பிரிவுக்கான தேசிய விருதையும் வென்றார், இதன் மூலம் தனது நிறுவனத்திற்காக மேலும் இரண்டு விருதுகளைப் பெற்றுத் தந்தார்.
செலிங்கோ லைஃப் ஆனது கிளைமுகாமையாளர் பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தியது, திரு. ஏ.எஸ் சமரசிங்க முதல் இடத்தையும் திருமதி.ஜே.மீரா இரண்டாம் இடத்தையும் தேசிய மட்டத்திலும் பெரிய நிறுவன மட்டத்திலும் பெற்றதன் மூலம், நிறுவனத்தின் மொத்த விருதுகளின் எண்ணிக்கையில் மேலும் நான்கு விருதுகளைச் சேர்த்தனர்.
பெரிய நிறுவன மட்டத்தில் விரைவு தொடக்க ஆலோசகர் பிரிவில் நிறுவனத்தின் வளர்ந்து வரும் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டன, திருமதி எஸ்.சிவகுமார் முதல் இடத்தையும் திரு. டி.என்.சாந்த மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்தச் சாதனை தொடர்பாக செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் கருத்து தெரிவிக்கையில்:
இந்த விருதுகள், ஒவ்வொரு நாளும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும், அவர்கள் தங்களுக்கென நிர்ணயித்துள்ள சிறப்புத் தரநிலைகளுக்கும் கிடைத்துள்ள வலுவான அங்கீகாரமாகும். 12 விருதுகளை வென்றிருப்பது நாம் பெருமைப்படக்கூடிய சாதனையாகும், ஆனால் ஐந்து தேசிய விருதுகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் எமது உத்தியோத்தர்கள் பாரிய நிறுவன பிரிவில் மட்டும் முன்னிலை வகிக்கவில்லை; அவர்கள் நாட்டிலேயே மிகச் சிறந்தவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்கள் என்பதை அவை நிரூபிக்கின்றன. இந்த வெற்றி, திறமை, ஒழுக்கம், தொழில்முறைத் திறன் மற்றும் சிறப்பை நோக்கிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது, மேலும் எமது ஒவ்வொரு வெற்றியாளருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2026 ஆம் ஆண்டுக்கான Brand Finance இன் நாட்டின் 100 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் தரவரிசையில் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்பீட்டு பிராண்டாகத் தரவரிசைப்படுத்தப்பட்ட செலின்கோ லைஃப், 2026 SLIM காந்தார் மக்களின் விருதுகள் (2026 SLIM Kantar People’s Awards) விருது வழங்கும் விழாவில், தொடர்ந்து 20 வது ஆண்டாக ஆண்டின் மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் என்ற விருதை முன்னெப்போதும் இல்லாத வகையில் வென்றுள்ள செலிங்கோ லைஃப், World Finance நிறுவனத்தால் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் செலிங்கோ லைஃப் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. காப்புறுதிதாரர்களின் இலட்சியங்களைப் பாதுகாத்து, அவற்றுடன் தொடர்புடைய இடர்களைக் குறைக்கும் வகையில், நிறுவனம் புதுமையான காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகிறது.





























