Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
ஆப்பிரிக்காவில் பிறப்புறுப்பு திருடப்படுவதாக வதந்தி!

Sep 4, 2026 - 05:11 PM

ஆப்பிரிக்காவில் பிறப்புறுப்பு திருடப்படுவதாக வதந்தி!
Mobitel Inner 1278

ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார். 

அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர். 

இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர். 

இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின. 

இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது போன்ற வதந்திகள் கடந்த 2008 ஆம் ஆண்டும் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார். 

மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார். 

மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த வைத்திய ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278