Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ஜனசக்தி பைனான்ஸ் இவோன் ப்ரோஹியரை பிரதம நிதி அதிகாரியாக நியமிக்கின்றது

Sep 2, 2026 - 12:29 PM

ஜனசக்தி பைனான்ஸ் இவோன் ப்ரோஹியரை பிரதம நிதி அதிகாரியாக நியமிக்கின்றது
Mobitel Inner 1278

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, 2026 ஆகஸ்ட் 18 முதல் இவோன் ப்ரோஹியரை அதன் பிரதம நிதி அதிகாரியாக நியமித்துள்ளது. நிறுவனம் அதன் வளர்ச்சி, நிதி செயல்திறன் மற்றும் நிறுவன மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வேளையில் அதன் சிரேஷ்ட தலைமைத்துவக் குழுவை வலுப்படுத்தும் வகையில் இந் நியமனம் அமைகிறது. 

நிதிச் சேவைத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவத்தை கொண்டுள்ள இவோன், பெருநிறுவன நிதி, மூலோபாயத் திட்டமிடல், நிதி நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் வணிக மாற்றம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது தொழில்முறை வாழ்க்கையில் PMF Finance PLC, Softlogic Finance PLC, Abans Finance PLC, Nations Trust Bank மற்றும் AMW Capital Leasing and Finance PLC ஆகியவற்றில் சிரேஷ்ட தலைமைத்துவப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர், அவர் PMF Finance PLC நிறுவனத்தில் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னதாக, Softlogic Finance PLC நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இப்பதவிகளில் பணியாற்றிய காலப்பகுதியில், வணிக வளர்ச்சியை முன்னெடுத்தல், நிதி மற்றும் செயற்பாட்டுத் திறனை வலுப்படுத்தல், நிர்வாகக் கட்டமைப்புகளை மேம்படுத்தல் மற்றும் நிறுவன மாற்றங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் அவர் பங்களித்துள்ளார். 

இந் நியமனம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன், “இவோன் நிதித்துறைசார் நிபுணத்துவம், தலைமைத்துவ அனுபவம் மற்றும் நிதிச் சேவைகள் துறை குறித்த ஆழமான புரிதல் ஆகியவற்றை கொண்டுள்ளார். ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய கட்டத்தில் அவரது நியமனம் இடம்பெற்றுள்ளது. நிதி முகாமைத்துவம், நிறுவன ஆளுகை மற்றும் மூலோபாயத் தீர்மானங்களை மேலும் வலுப்படுத்துவதில் அவரது நிபுணத்துவம் பங்களிக்கும் என நான் நம்பும் அதேவேளை, வலுவானதும் போட்டித்தன்மை மிக்கதுமான வணிகத்தை தொடர்ந்து கட்டியெழுப்புவதற்கும் இது உறுதுணையாக அமையும்.” என்றார். 

தனது புதிய பதவியில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதிசார் மூலோபாயத் தலைமைத்துவத்தை வழங்கவுள்ள இவோன், நிதி முகாமைத்துவம் மற்றும் நிறுவன ஆளுகையை வலுப்படுத்துவதுடன், வணிகத் திட்டமிடல், இடர் முகாமைத்துவம் மற்றும் மூலோபாயத் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கவும் உள்ளார். 

இவோனின் நியமனத்தின் மூலம், ஜனசக்தி பைனான்ஸ் தனது தலைமைத்துவ ஆற்றல்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அதன் வளர்ச்சி மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், நிதிசார் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும், வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கான மதிப்பை மேலும் உயர்த்துவதிலும் தொடர்ந்தும் கவனம் செலுத்துகிறது. 

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி 

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச்சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 45 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும். 

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி - https://www.janashakthifinance.lk/

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278