Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
ஒற்றை கையால் அசால்டாக பிடித்த கேட்ச்!

Sep 1, 2026 - 03:55 PM

ஒற்றை கையால் அசால்டாக பிடித்த கேட்ச்!
Mobitel Inner 1278

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையில் பிடித்த அசத்தலான கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று (31) நடந்த 22 ஆவது லீக் போட்டியில் டிரினிடாட் அண்ட் டொபாகோ நைட்ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. 

மழை பெய்ததால் இந்தப் போட்டி 16 ஓவராகக் குறைக்கப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற டிரிபாகோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 185 ஓட்டங்களை குவித்தது. ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக ஆடி 40 பந்தில் சதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்தில் 111 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நடப்பு தொடரில் இது அவரது 2 ஆவது சதமாகும். ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியாக ஆடி 27 ஓட்டங்களை எடுத்தார். 

இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டிரினிடாட் அணிக்கு 16 ஓவரில் 182 ஓட்டங்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அப்போது கடினமான இலக்கை நோக்கி விளையாடிய டிரினிடாட் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன், டுவைன் பிரிட்டோரியஸ் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கி அடித்தார். 

அப்போது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் வேகமாக ஓடிவந்து, பாய்ந்து ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த கேட்ச்சை நம்பமுடியாமல் அவர் சிரித்தபடி நின்றார். இதனால் சுனில் நரைன் 1 ஓட்டங்களில் வெளியேறினார். 

தொடர்ந்து ஆடிய டிரினிடாட் அணி 16 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்தில் 55 ஓட்டங்களையும், நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 16 பந்தில் 43 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

கயானா அணி சார்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சமீப காலமாக கிளென் பிலிப்ஸ் சூப்பர்மேனாக பாய்ந்து பந்தை தடுப்பது, கேட்ச் பிடிப்பது என தொடர்ந்து அசாத்தியமாக பீல்டிங் செய்துவருகிறார். கிளென் பிலிப்சின் அபார கேட்ச் கயானா அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278