Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையில் சில்லறை வர்த்தகம் மற்றும் வாகனத் துறைகளில் வாடிக்கையாளர் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, Salesforce நிறுவனத்

Aug 31, 2026 - 05:06 PM

இலங்கையில் சில்லறை வர்த்தகம் மற்றும் வாகனத் துறைகளில் வாடிக்கையாளர் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, Salesforce நிறுவனத்
Mobitel Inner 1278

- இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கீல்ஸ் நெக்ஸஸ் நம்பிக்கைத்திட்ட உறுப்பினர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட ஈடுபாட்டை வழங்க, கீல்ஸ் சுப்பர்மார்க்கெட் விற்பனை மையங்கள் Salesforce ஐ பயன்படுத்துகின்றன 

- வாடிக்கையாளர் நுண்ணறிவை ஒருங்கிணைக்கவும், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், மற்றும் அறிவார்ந்த தானியக்கத்தை செயல்படுத்தவும் John Keells CG Auto நிறுவனம், Salesforce ஐ பயன்படுத்துகிறது 

#1 Agentic CRM* ஆன Salesforce, இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (John Keells Holdings PLC - JKH) உடனான தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக இன்று அறிவித்தது. இந்த விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பு, JKH-இன் இரண்டு முக்கிய வணிகங்களான - இலங்கையின் முன்னணி சுப்பர்மார்க்கெட் அங்காடி சங்கிலிகளில் ஒன்றான கீல்ஸ் சுப்பர்மார்க்கெட் விற்பனை மையங்கள் (Keells supermarkets) மற்றும் அதன் வாகன வணிகமான ஜோன் கீல்ஸ் சிஜி ஓட்டோ (John Keells CG Auto) - ஆகியவை தமது அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகும் வேளையில், இணைக்கப்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தரவு சார்ந்த வலுவான வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்க உதவும். 

கீல்ஸ் சூப்பர் மார்க்கெட் விற்பனை மையங்களில் தனிப்பயனாக்கப்பட்ட ஈடுபாட்டை வலுப்படுத்துதல் 

இந்தக் கூட்டு முயற்சியின் மையத்தில், இலங்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கைத் திட்டங்களில் ஒன்றான Keells Nexus உள்ளது. இது Salesforce ஆல் இயக்கப்பட்டு, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களுக்குச் சேவை செய்கிறது. 

Salesforce Loyalty Management, Data 360, Marketing Automation, MuleSoft மற்றும் Agentforce Service ஆகிய தொழில்நுட்பங்களை கீல்ஸ் சுப்பர் பயன்படுத்துகிறது. வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள், நடத்தைகள், விருப்பத்தேர்வுகள் மற்றும் தொடர்புகளை ஒன்றிணைப்பதன் மூலம், கீல்ஸ் வாடிக்கையாளர் நுண்ணறிவைச் செயல் நடவடிக்கையாக மாற்ற முடியும். இது விசுவாசத்தை ஆழப்படுத்தும், ஈடுபாட்டைத் தூண்டும் மற்றும் வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் அதிக மதிப்பைத் தோற்றுவிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்குகிறது. 

John Keells CG Auto நிறுவனத்தில் வாகனப் பயணத் அனுபவத்தை இணைத்தல் 

இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக John Keells CG Auto உள்ளது. இது நாட்டில் புதிய எரிசக்தி வாகனங்களை அதிகளவில் ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவளிக்கிறது. 

வாகன கையிருப்பு முகாமைத்துவத்திற்கு ஆதரவளிக்கவும், அதை விற்பனைக்கு முந்தைய, விற்பனை, உரிமை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை நிலை மட்டங்களில் வாடிக்கையாளர் தொடர்புகளுடன் இணைக்கவும் இந்த நிறுவனம் Salesforce Automotive Cloud தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. 

வாடிக்கையாளர் மற்றும் வாகனத் தரவுகளின் ஒருங்கிணைந்த பார்வை, John Keells CG Auto நிறுவனத்திற்கு, வாகனத்தைக் கண்டறிதல் மற்றும் வாங்குதல் முதல் சேவை மற்றும் உரிமை வரை வாகனப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இணைக்க உதவும். இந்த அடித்தளம், சூழலுக்கு ஏற்ற மற்றும் சீரான வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதோடு, புதிய இடங்கள், சேவைகள் மற்றும் முதன்மைப் பிரிவுகளில் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கும் ஆதரவளிக்கும். 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைவரும் மற்றும் குழும பிரதம தகவல் அதிகாரியுமான ரமேஷ் சண்முகநாதன் கூறுகையில், “ஜோன் கீல்ஸில், அனுபவப் பொருளாதாரத்தை வேறுபாட்டின் அடுத்த எல்லையாக நாங்கள் காண்கிறோம். இது பரிவர்த்தனைகளுக்கு அப்பால் சென்று, இணைக்கப்பட்ட, அறிவார்ந்த மற்றும் மென்மேலும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை உருவாக்குவதைப் பற்றியது. Salesforce உடனான எங்கள் கூட்டாண்மை, தரவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றை ஒன்றிணைத்து, உள்ளுணர்வைச் செயல் வடிவமாக மாற்றுகிறது. கீல்ஸ் சுப்பர் மார்க்கெட் வர்த்தகமையங்கள் முதல் John Keells CG Auto வரை, குழுமம் முழுவதும் விரிவடையக்கூடிய ஒரு விரிவுபடுத்தப்படக்கூடிய அத்திவாரத்தை நாங்கள் உருவாக்குகிறோம்; இது ஒவ்வொரு வணிகத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும். முகவர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு (agentic AI) மென்மேலும் தொலைதூரத்துக்கு நகரும்போது, சூழலை நிகழ்நேரத்தில் செயல் வடிவமாக மாற்றுவதற்கான வாய்ப்பை நாங்கள் காண்கிறோம் - இது பெரிய அளவில் தனிப்பயனாக்கத்தை செயல்படுத்துகிறது.” 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், சில்லறை வர்த்தகத் துறையின் தகவல் தொழில்நுட்பத் தலைவருமான ஒசந்த வர்ணகுலசூரிய கூறுகையில், “இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கீல்ஸ் நெக்ஸஸ் உறுப்பினர்களுடன், தனிப்பயனாக்கம் என்பது பொருத்தமானதாகவும், சரியான நேரத்தில் வழங்கப்படுவதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள், விருப்பத்தேர்வுகள் மற்றும் ஈடுபாட்டு சமிக்ஞைகளை ஒன்றிணைக்க Salesforce எங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை நன்கு புரிந்துகொண்டு, ஒவ்வொரு தொடர்பையும் மிகவும் பயனுள்ளதாக மாற்ற முடியும். இது வெகுமதிகளுக்கு அப்பாற்பட்டு, ஆழமான அன்றாட உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும், அனைத்து வழிகளிலும் மிகவும் சீரான அனுபவத்தை வழங்குவதற்கும் ஆகும்.” 

Salesforce - இந்தியா மற்றும் இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் மங்கிரன் சௌஹான் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் வணிகங்களை தனித்தனி அமைப்புகளாகவோ அல்லது செயல்பாடுகளாகவோ கருதுவதில்லை. அவர்கள் ஒரு தொடர்ச்சியான உறவையே உணர்கிறார்கள். ஒருவர் அன்றாட சில்லறைப் பொருளை வாங்கினாலும் சரி, அல்லது பல ஆண்டுகளாக வாகன உரிமையாளராக இருந்தாலும் சரி, எதிர்பார்ப்பு ஒன்றுதான்: என்னை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், எனது சூழலைப் புரிந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு தொடர்பையும் எளிதாக்குங்கள். ஜோன் கீல்ஸ் நிறுவனத்துடனான எங்கள் ஒத்துழைப்பு, வாடிக்கையாளர் தரவுகளைச் சேகரிப்பதிலிருந்து, முக்கியமான தருணங்களில் நம்பகமான வாடிக்கையாளர் நுண்ணறிவைச் செயல்படுத்துவதற்கான ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. தரவு, CRM மற்றும் AI ஆகியவற்றை ஒரே இணைக்கப்பட்ட இயக்க மாதிரியாக ஒன்றிணைப்பதன் மூலம் நவீன நிறுவனங்கள் நிலையான வளர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன.” 

நிறுவனங்கள் தங்களின் தற்போதைய தொழில்நுட்ப அடித்தளங்களை மேம்படுத்தி, தரவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியக்கத்தைப் பயன்படுத்தி மேலும் இணைக்கப்பட்ட, அறிவார்ந்த மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வணிகங்களை உருவாக்குவதன் மூலம் டிஜிட்டல் உருமாற்றத்தின் அடுத்த கட்டத்தை எவ்வாறு தழுவிக்கொள்ள முடியும் என்பதை இந்தக் கூட்டுறவுகள் நிரூபிக்கின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278