Header Logo
Vallibel FD
Selan Bank
உலகம்
விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை அதிகரித்த அமெரிக்கா!

Aug 25, 2026 - 09:49 AM

விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை அதிகரித்த அமெரிக்கா!
Mobitel Inner 1278

அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டொலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா முன்மொழிந்தது. அமெரிக்க பாராளுமன்றம் தற்போது H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது. 

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் முதுகலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற வெளிநாட்டு பணியாளர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. இது பொதுவாக "முதுகலை ஒதுக்கீட்டு வரம்பு" என்று அழைக்கப்படுகிறது. 

H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1,00,000 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தை இரத்து செய்து மாவட்ட நீதிபதியின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது. 

"தற்போதுள்ள H-1B விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, 1,03,265 அமெரிக்க டொலர் தொகையை ஒரு தனிப்பட்ட, கூடுதல் H-1B கட்டணமாக செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிகிறது" என்று 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' இதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது. 

அடுத்த 30 நாட்களுக்குள் இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு இத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி விதிமுறை வெளியிடப்படும். 

இந்தக் கட்டணம் H-1B ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மனுக்களுக்குப் பொருந்தாது என்றும் அது கூறியது. 

முன்மொழியப்பட்ட விதியின் கீழ், குறிப்பிட்ட இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் போன்ற ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்படாத H-1B மனுக்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 

"முன்மொழியப்பட்ட H-1B கட்டணமானது, சட்டப்பூர்வ குடியேற்ற திட்டங்களை ஆய்வு செய்யவும், சரிபார்க்கவும் மற்றும் ஆதரிக்கவும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்டுவதற்காகவே கொண்டு வரப்படுகிறது. 

இல்லையெனில் இச்செலவுகள் வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கும்" என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஊடக பேச்சாளர் ஜாக் காலர் கூறினார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278