Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
வைபவ் சூர்யவன்ஷியின் வீக்னஸ் தெரிஞ்சு போச்சு!

Jul 10, 2026 - 04:29 PM

வைபவ் சூர்யவன்ஷியின் வீக்னஸ் தெரிஞ்சு போச்சு!
Mobitel Inner 1278

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த நிலையில், இங்கிலாந்து அணி வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனத்தை கண்டுபிடித்து அவரை வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது. 

இங்கிலாந்து மண்ணில் சர்வதேச அறிமுகம் பெற்ற வைபவ் சூர்யவன்ஷி தனது அறிமுகப் போட்டியில் 14 ஓட்டங்கள், இரண்டாவது போட்டியில் 13 ஓட்டங்கள், மூன்றாவது போட்டியில் 10 பந்துகளில் 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

வைபவ் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதை அடுத்து வைபவின் பலவீனத்தை இங்கிலாந்து அணி கண்டுபிடித்து விட்டது தெரிய வந்துள்ளது. 

இது குறித்துப் பேசிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷித், 

"வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டிற்குப் புதியவர் என்றாலும், அவரது ஐபிஎல் ஆட்டங்களை வைத்து அவரிடம் உள்ள தரவுகளை எங்களது குழுவினர் ஆராய்ந்தனர். அவர் எங்குத் தடுமாறுகிறார் என்பதை அறிந்து, அதற்கேற்பவே பந்துவீச்சுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்" என்றார். 

மேலும், "அவருக்கு வெறும் 15 வயது தான் ஆகிறது என்பதால் அவர் மீது அழுத்தம் இருப்பது இயல்புதான். ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவருக்குத் தன்னிச்சையாக விளையாடும் முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது. பல்வேறு மைதானங்களின் தன்மைக்கு ஏற்ப அவர் விளையாடிப் பழகும்போது தற்காப்பு முறைகளைக் கற்றுக்கொள்வார்" என்று அறிவுறுத்தினார். 

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்துப் பேசிய இங்கிலாந்து முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, 

"வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழக்கும் விதத்தை நான் அவரது பலவீனமாகப் பார்க்கவில்லை. இதுபோன்ற பந்துகளை அவர் சிக்ஸராகப் பறக்கவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அவரைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர் இன்னும் 3 அல்லது 5 போட்டிகளில் ஓட்டங்களை குவிக்கத் தவறினால் மட்டுமே அது அவருக்குப் பிரச்சனையாக மாறும். தற்போதைய நிலையில் அவர் மிகவும் திறமையான வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்று கூறி இருக்கிறார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278