Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
BUILD BEYOND 2026 தொழில்நுட்ப மாநாட்டில், எதிர்காலத்திற்குத் தயாரான கட்டுமானத்துறைக்கான உத்வேகத்தை டோக்கியோ சீமெந்து வழங்குகிறது

Jun 25, 2026 - 03:42 PM

BUILD BEYOND 2026 தொழில்நுட்ப மாநாட்டில், எதிர்காலத்திற்குத் தயாரான கட்டுமானத்துறைக்கான உத்வேகத்தை டோக்கியோ சீமெந்து வழங்குகிறது
Mobitel Inner 1278

டோக்கியோ சீமெந்து நிறுவனம் Build Beyond 2026 மாநாட்டை முன்னெடுத்திருந்தது. முன்னணிப் பேராசிரியர்கள், சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் வல்லுநர்கள் மற்றும் இலங்கையின் கட்டுமானத்துறை சார்ந்த தொழில்முறை நிபுணர்களை ஒன்றிணைத்த ஒரு முதன்மையான அறிவுப் பகிர்வு மாநாடாக இது அமைந்திருந்தது. இந்நிகழ்வில், IIT டெல்லி - அபுதாபி வளாகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டுமானத் தொழில்நுட்ப நிபுணர் பேராசிரியர் சஷாங்க் பிஷ்னோய் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியான் மெண்டிஸ் ஆகியோரின் முதன்மை உரைகள் இடம்பெற்றிருந்தன. 

இந்தமாடு, டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Build Beyond பொறியியல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் இரண்டாவது பதிப்பாகும். இது கல்வித்துறையினருக்கும் தொழில்துறையினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவும், சீமெந்து மற்றும் கொங்கிரீட் துறையிலான உலகளாவிய போக்குகள், கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கலந்துரையாடல்கள், மிகவும் நிலைபேறான மற்றும் செலவு குறைந்த கட்டுமான நடைமுறைகளை நோக்கி வழிநடத்தும் பொருள் அறிவியல் ரீதியிலான முன்னேற்றங்களை மையமாகக் கொண்டிருந்தன. இவ்விழா, அரச துறை அதிகாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வித்துறையினர், பொறியியல் மாணவர்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்கேற்பை ஈர்த்திருந்ததுடன், கட்டுமானத்துறை முழுவதும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஒரு விறுவிறுப்பான தளத்தையும் உருவாக்கியிருந்தது. இந்தமாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக, பல புகழ்பெற்ற தொழில்துறை தலைவர்கள் பங்கேற்ற “ஒரு நெகிழ்ச்சியான மற்றும் நிலைபேறான கட்டுமான எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பிலான உயர்மட்டக் குழு விவாதம் அடங்கியிருந்தது. 

இக்குழு விவாதத்தில், இலங்கை கட்டுமானத் துறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் ஆலோசகர்கள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும், பிரதித் தலைவருமான பொறியியலாளர் நிஸங்க விஜேரத்ன; CTBUH ஸ்ரீ லங்காவின் தலைவரும், இலங்கை பசுமைக் கட்டிடப் சம்மேளனத்தின் உப தலைவரும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கௌரவ சிரேஷ்ட விரிவுரையாளரும், மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ வெளிவாரி விரிவுரையாளருமான பொறியியலாளர் ஷிரோமல் பெர்னாண்டோ; இலங்கை கட்டமைப்புப் பொறியியலாளர்கள் சங்கத்தின் (SSE-SL) உறுப்பினரும் முன்னாள் தலைவரும், இலங்கை ஆலோசனைக் பொறியியலாளர்கள் சங்கத்தின் சம்மேளன உறுப்பினருமான பொறியியலாளர் ஆனந்த சேனாரத்; மற்றும் இலங்கை கட்டடக் கலைஞர் நிறுவனத்தின் (CIOB) தலைவரும், தெற்காசிய லீன் கட்டுமானச் சங்கத்தின் தலைவருமான கலாநிதி ரொஹான் கருணாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த அமர்வை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிவில் பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் குஷான் விஜேசுந்தர நெறிப்படுத்தியிருந்தார். 

IIT டெல்லி - அபுதாபி வளாகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டுமானத் தொழில்நுட்ப நிபுணர் பேராசிரியர் சஷாங்க் பிஷ்னோய் குறைந்த காபன் நிர்மாண தொழில்னுட்பங்கள் தொடர்பில் இரு பிரதான விளக்கவுரைகளை ஆற்றியிருந்தார். முதல் உரை, “குறைந்த கார்பன் சீமெந்துகளின் மேம்பாடும் பயன்பாடும்’ என்ற தலைப்பிலான அவரது முதல் உரை, சுண்ணாம்புக்கல் பதப்படுத்தப்பட்ட களிமண் சீமெந்து (Limestone Calcined Clay Cement - LC3) தொழில்நுட்பத்திலான அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் இந்திய தர நிர்ணய பணியகத்தினால் (Bureau of Indian Standards) ஏற்றுக்கொள்ளப்பட்ட LC3 தரநிலையின் உருவாக்கம் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்தது. இரண்டாவது விளக்கவுரை, “குறைந்த கார்பன் கொங்கிரீட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடு” (Design and Application of Low Carbon Concretes) என்ற தலைப்பில், இலங்கையின் கட்டுமானத் துறை சார்ந்த நிலைபேறான கொங்கிரீட் தீர்வுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தது. 

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியான் மெண்டிஸ், “நிகர பூஜ்ஜியம்: மூலப்பொருட்கள் முதல் புதிய கட்டமைப்புப் பயன்பாடுகள் வரை” (Net Zero: Materials to Novel Structural Applications) என்ற தலைப்பில் தனது முதன்மை உரையை நிகழ்த்தினார். நவீன வானளாவிய கட்டிடங்கள் மற்றும் பெருமளவிலான உட்கட்டமைப்புகளில் ஆயுட்காலம், வலிமை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிரான பின்னடைவுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அதியுயர் செயல்திறன் கொண்ட கொங்கிரீட்டின் முக்கியத்துவத்தை அவர் விளக்கமளித்தார். கொங்கிரீட் கட்டமைப்புகள் மற்றும் கட்டமைப்பு சுமைகள் தொடர்பான பல அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச தர நிர்ணயக் குழுக்களில் பணியாற்றிய தனது அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான உண்மைநிலை ஆய்வுகளின் அடிப்படையில், புர்ஜ் கலீஃபா, மெர்டேகா 118, யுரேகா டவர் மற்றும் தாமரை கோபுரம் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற அடையாளக் திட்டங்களின் கட்டுமானப் பணிகளில் தனக்கிருந்த பங்களிப்புகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளைப் பேராசிரியர் மெண்டிஸ் பகிர்ந்து கொண்டார். 

டோக்கியோ சீமெந்து குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, R&D பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல், புத்தாக்கங்கள் பிரிவின் பணிப்பாளர் பிரவீன் ஞானம் ஆகியோர் சீமெந்து மற்றும் கொங்கிரீட் தொழில்னுட்பங்கள் பற்றிய நிறுவனத்தின் பிந்திய முன்னேற்றங்கள் பற்றிய விளக்கங்களை பகிர்ந்து, நிலைபேறான மற்றும் புத்தாக்கமான நிர்மாணத் தீர்வுகளில் தமது கவனத்தை மீள உறுதி செய்திருந்தனர். 

உலகத்தரம் வாய்ந்த அறிவுப் பகிர்வு முயற்சிகள் மற்றும் சர்வதேச நிபுணத்துவத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் ஊடாக, உள்நாட்டுக் கட்டுமானத் துறையை வலுப்படுத்துவதற்கான டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பை இந்தமாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சீமெந்து, கொங்கிரீட் மற்றும் சீமெந்து அடிப்படையிலான புதுமையான தயாரிப்புகளின் இலங்கையின் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்ற வகையில், டோக்கியோ சீமெந்து குழுமம் தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றில் தனது மாறாத கவனத்தைச் செலுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு முதன்மைப் பங்காளராகத் தன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278